சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள செல்லியம்பாளையம், தென்னங்குடி பாளையம், பெத்தநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக கஞ்சா பொட்டலங்கள் விற்பனை செய்யப்படுவதாக சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா காணிக்கருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் ஆத்தூர் நகர காவல் துறையினர் செல்லியம்பாளையம் பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது செல்லியம்பாளையம் சுடுகாடு அருகே முதியவர் ஒருவர் சட்ட விரோதமாக கஞ்சா பொட்டலங்களை விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த காவல் துறையினர் அவரிடமிருந்து அரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்ததோடு வழக்குப்பதிவு செய்து ஆத்தூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க... https://www.etvbharat.com/tamil/tamil-nadu/state/kanniyakumari/south-railway-general-manager-rahul-jain-byte/tamil-nadu20190917165724465