சேலம் மாவட்டம் அஸ்தம்பட்டியிலிருந்து கன்னங்குறிச்சி செல்லும் சாலை அருகே காவல் நிலையம் உள்ளது. அதன் அருகே பூட்டியிருந்த வீட்டின் பின்புறம் நேற்று (ஆகஸ்ட் 10) இரவு தூக்கில் தொங்கிய நிலையில் அடையாளம் தெரியாத முதியவர் தற்கொலை செய்துகொண்டார். இதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் அஸ்தம்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.
அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், முதியவரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இது குறித்து சேலம் மாநகர் காவல் துணை ஆணையர் செந்தில்குமார் தலைமையிலான காவல் துறையினர், முதியவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாராவது கொலை செய்து விட்டு உடலை இங்கு போட்டுவிட்டார்களா? என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காவல் நிலையத்திலிருந்து 200 அடி தூரத்தில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ஒரே புடவையில் தூக்கிட்டு இளம் தம்பதி தற்கொலை