சேலம் அடுத்த ஓமலூர் காமலாபுரத்தில், 'டேக் ஆப் ஏவியேஷன்' என்ற விமானிகளுக்கான, புதிய பயிற்சி நிறுவனத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று (பிப்.26) தொடங்கிவைத்தார். அப்போது, விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி கட்டுப்பாட்டு அறையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அமர்ந்து, விமானத்தை இயக்குவதற்கான செய்முறை விளக்கத்தையும் கேட்டுக்கொண்டார்.
இங்கு, அதிநவீன தொழில்நுட்பத்தில், விமானத்தை இயக்குவதற்கான பயிற்சி, செய்முறை விளக்கம் ஆகியவை அளிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், விமானத்தில் பணிபுரியும் பணிப்பெண்களுக்கான பயிற்சியும் அளிக்கப்படுகிறது. மாதிரி விமானங்கள், மாதிரி கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு, உண்மையாக விமானம் இயக்குவது போலவே, தத்ரூபமாக பயிற்சி அளிக்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இப்பயிற்சி நிலையம் சேலம் மாவட்டம் மற்றும் அண்டை மாவட்ட விமான பணி கல்வி பெறும் மாணவர்களுக்கு, மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று சேலம் விமான நிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: நகைக்கடன், மகளிர் சுய உதவிக்குழு கடன்கள் தள்ளுபடி: முதலமைச்சர் அறிவிப்பு