ETV Bharat / state

கரோனா பரிசோதனைக்கான நடமாடும் 32 சிறப்பு மருத்துவக் குழு வாகனங்கள்!

சேலம் : கரோனா கண்டறியும் சோதனை முகாம்கள் நடத்துவதற்கான நடமாடும் 32 சிறப்பு மருத்துவக் குழு வாகனங்களை மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

நடமாடும் 32 சிறப்பு மருத்துவக் குழு
New corona camp vehicles
author img

By

Published : Dec 7, 2020, 10:24 PM IST

கோவிட்-19 சிறப்பு முகாம்கள் நடத்துவதற்கான நடமாடும் 32 சிறப்பு மருத்துவக் குழு வாகனங்களின் தொடங்கி நிகழ்வு ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று (டிச.7) நடைபெற்றது.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சேலம் ஆட்சியர் சி.அ.ராமன், நடமாடும் வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இது தொடர்பாக சேலம் ஆட்சியர் சி.அ.ராமன் கூறுகையில், “சேலம் மாவட்டத்திற்குட்பட்ட மாநகராட்சி, ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் பேரூராட்சி பகுதிகளில் கரோனா வைரஸ் நோய்த் தடுப்பு மற்றும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்த வகையில், இன்று கோவிட்-19 தொற்றுநோய் தடுப்பு முகாம்கள், காய்ச்சல் கண்டறியும் சிறப்பு முகாம்கள் மேற்கொள்வதற்காக 32 நடமாடும் சிறப்பு மருத்துவ குழு வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.சிறப்பு முகாம்கள் நடத்துவதற்காக 20 நடமாடும் மருத்துவ குழுக்கள், 10 தொற்று நோய் தடுப்புக்குழுக்கள் மற்றும் 2 புகைமருந்து அடிக்கும் வாகனங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

அதிகமான பாதிப்பைக் கொண்ட 60 பகுதிகளை கண்டறிந்து அந்த இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகின்றது. இந்த முகாம்களில் காய்ச்சலுக்குரிய சிகிச்சை, மருந்து மாத்திரைகள் வழங்குதல் போன்றவை மேற்கொள்ளப்படுகிறது. தொற்றுநோய் தடுப்பு குழுக்கள் மூலம் தண்ணீரினால் பரவும் நோய்கள் மற்றும் கொசுக்களால் பரவும் நோய்களை தடுக்க, குளோரினேஷன் செய்தல், புகைமருந்து அடித்தல், கிருமிநாசினி தெளித்தல், காய்ச்சல் குறித்தான விழிப்புணர்வு ஏற்படுத்துதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படுகின்றது.

அதேபோல பருவ மழைகால நோய்களான டெங்கு, சிக்குன்குனியா, மலேரியா, பன்றிக் காய்ச்சல் போன்றவற்றை தடுக்க மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

காய்ச்சல் கண்டறியும் சிறப்பு மருத்துவக் குழுவிற்கு தேசிய குழந்தைகள் மற்றும் சிறார் நலத்திட்ட சிறப்பு வாகனங்கள் மற்றும் நடமாடும் மருத்துவமனை மருத்துவ வாகனங்கள் உள்ளிட்ட 20 வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இச்சிறப்பு நடமாடும் மருத்துவக் குழு வாகனத்தில் ஒரு வட்டார சுகாதார மேற்பார்வையாளர், ஒரு சுகாதார ஆய்வாளர், 3 கொசுப்புழு ஒழிப்புப்பணியாளர்கள் மற்றும் வாகன ஓட்டுநர் என மொத்தம் 6 நபர்களுக்கு குறையாமல் இச்சிறப்பு மருத்துவக் குழுவில் இருப்பார்கள்.

கரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவாமல் தடுப்பதற்காக, சமூக இடைவெளியை கடைபிடித்தல், முகக்கவசம் அணிதல் மற்றும் கைகளை சோப்புப்போட்டு அடிக்கடி கழுவுதல், கிருமி நாசினி உபயோகித்தல் ஆகிய முறைகளை பொதுமக்களும், கடைகள், வணிக வளாகங்கள், திருமண நிகழ்ச்சிகள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். நோய்த்தொற்றுபரவாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் தங்களின் முழு ஒத்துழைப்பினை அளித்திட வேண்டும" என்று தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) சேலம் மரு.ஆர்.செல்வக்குமார் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க : நவீன குடும்ப நல கருத்தடை: நடமாடும் பரப்புரை வாகனங்களை கொடியசைத்து தொடங்கிவைத்த ஆணையர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.