தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலையொட்டி, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. இதையொட்டி அனைத்து பகுதிகளிலும் பறக்கும் படை அலுவலர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில், சேலம் மாவட்டம் கருப்பூர் சுங்கச்சாவடி பகுதியில் பறக்கும் படை அலுவலர்கள் இன்று(மார்ச்.06) வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த பச்சனம்பட்டியை சேர்ந்த ராஜு என்பவரின் இருசக்கர வாகனத்தைப் பறக்கும் படையினர் சோதனை செய்தனர். சோதனையில், அவரிடம் உரிய ஆவணங்களின்றி 90 ஆயிரம் ரூபாய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது .
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், வங்கியில் பணம் செலுத்த எடுத்து செல்வதாக தெரிவித்தார். இருப்பினும் உரிய ஆவணங்களை சமர்பித்து பணத்தைப் பெற்றுச் செல்லுமாறு ராஜுவிடம், பறக்கும் படை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: பல நூறு கோடி மோசடி செய்த வின்ஸ்டார் சிவகுமார் அதிரடி கைது!