ETV Bharat / state

'மேட்டூர் அணையை திறந்த முதலமைச்சருக்கு விவசாயிகள் நன்றி' - தமிழ்நாடு

சேலம்: காவிரி டெல்டா பாசனப் பகுதிகளுக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதற்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்.

mettur dam
author img

By

Published : Aug 13, 2019, 12:26 PM IST

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த ஒருவாரத்திற்கு மேலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடகா மாநிலத்தில் உள்ள கபினி கிருஷ்ணராஜசாகர் அணை உள்ளிட்ட பல்வேறு அணைகள் நிரம்பி வழிகின்றன.

இதில் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து 3 லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அந்த தண்ணீர் பிலிகுண்டுலு வழியாக காவிரி ஆற்றில் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. இதனையடுத்து மேட்டூர் அணையின் நீர் மட்டம் 100 அடியை தொட்டு உள்ளது.

முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்கும் விவசாயிகள்

முன்னதாக, தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி தஞ்சை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்ட பாசன வசதிக்காக மேட்டூர் அணையில் இருந்து நீரை திறந்து விட்டார். இதனால் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதுதொடர்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் சுந்தரம் கூறுகையில், மேட்டூர் அணையில் இருந்து குறித்த நேரத்தில் முதலமைச்சர் பழனிசாமி தண்ணீர் திறந்து விட்டிருக்கிறார். இது காவிரி டெல்டா விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் பல லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். எனவே விவசாயிகள் சார்பில் தமிழ்நாடு அரசுக்கும், முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்" என்றார்.

Intro:காவிரி டெல்டா பாசனப் பகுதிகளுக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதற்காக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்.

Body:காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த ஒருவாரத்திற்கு மேலாக கனமழை பெய்து வருகிறது. இதனையடுத்து கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி கிருஷ்ணராஜசாகர் அணை உள்ளிட்ட பல்வேறு அணைகள் நிரம்பி வழிகின்றன.

இந்த நிலையில் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து 3 லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறந்துவிட பட்டது.

அந்த தண்ணீர் பிலிகுண்டுலு வழியாக காவிரி ஆற்றில் மேட்டூர் அணைக்கு வந்து சேர்ந்து கொண்டிருக்கிறது. நீர்வரத்து அதிகரித்த நிலையில் விறுவிறுவென அணையின் நீர்மட்டம் 100 அடியை தொட்டு உள்ளது.

இதன் காரணமாக மேட்டூர் அணையில் இருந்து இன்று காலை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 10 ஆயிரம் கன அடி நீரை தஞ்சை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்ட பாசன வசதிக்காக திறந்துவிட்டார்.

இதனால் தஞ்சை திருவாரூர் நாகப்பட்டினம் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுதொடர்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் சுந்தரம் கூறுகையில் ," காவிரி டெல்டா விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிகழ்வு .

மேட்டூர் அணையில் இருந்து குறித்த நேரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தண்ணீர் திறந்து விட்டு இருக்கிறார் . இதனால் பல லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறும் விவசாயிகள் சார்பில் தமிழக அரசுக்கும் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்" என்று தெரிவித்தார்.

Conclusion:இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் நூற்றில் ஒரு அடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது .காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்த வண்ணம் இருப்பதால் வெகு விரைவில் 120 அடியை மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.