ETV Bharat / state

சொந்த ஊரில் தகனம் செய்யப்பட்ட மாவோயிஸ்ட் மணிவாசகம்! - சொந்த ஊரில் தகனம் செய்யப்பட்ட மாவோயிஸ்ட் மணிவாசகம்

சேலம்: சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்ட மாவோயிஸ்ட் மணிவாசகத்தின் உடல் அவரின் ஆதரவாளர்கள், உறவினர்களின் இறுதி அஞ்சலிக்குப் பிறகு ராமமூர்த்தி நகரில் தகனம் செய்யப்பட்டது.

சொந்த ஊரில் தகனம் செய்யப்பட்ட மாவோயிஸ்ட் மணிவாசகம்!
author img

By

Published : Nov 15, 2019, 2:11 PM IST

சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி அடுத்த ராமமூர்த்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் மணிவாசகம். இவர் 35 ஆண்டுகளுக்கும் மேலாக மாவோயிஸ்ட் அமைப்பில் பணியாற்றிவந்தார்.

இந்நிலையில் அவர் கேரள மாநிலம் அட்டப்பாடி வனப்பகுதியில் நக்சல் தடுப்புப் பிரிவு காவல் துறையினரால் கடந்த மாதம் 29ஆம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார் . பின்னர் அவரின் உடல் திருச்சி அரசு மருத்துவமனையில் காவல் துறை பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்தது. மணிவாசகத்தின் மரணம் குறித்து அவரின் தங்கை லட்சுமிக்கும் அவரின் கணவருக்கு காவல் துறையினர் தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து இருவரும் திருச்சூர் சென்று மணிவாசகத்தின் உடலை அடையாளம் காட்டி பெற்றுக்கொள்ள மறுத்தனர். மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடுத்தார். இதனால் 15 நாட்களாக மணிவாசகரின் உடல் தகனம் செய்யப்படாமல் இருந்தது . இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அளித்த உத்தரவின் பேரில் மணிவாசகத்தின் உடல் அவரின் தங்கை லட்சுமியிடம் நேற்றுமுன்தினம் ஒப்படைக்கப்பட்டது.

மணிவாசகம் ஆதரவாளர்கள், உறவினர்கள் அஞ்சலி
மணிவாசகம் ஆதரவாளர்கள், உறவினர்கள் அஞ்சலி

பின்னர், மாவோயிஸ்ட் மணிவாசகத்தின் உடல் பலத்த காவல் துறை பாதுகாப்புடன் நேற்று முன்தினம் , திருச்சூரிலிருந்து சேலம் அரசு தலைமை பொது மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டது. மணிவாசகத்தின் மனைவி கலா, மற்றொரு தங்கை சந்திரா ஆகியோர் திருச்சி சிறையிலிருந்து இறுதி சடங்கிற்காக பரோலில் வந்தனர்.

சொந்த ஊரில் தகனம் செய்யப்பட்ட மாவோயிஸ்ட் மணிவாசகம்!

இதனையடுத்து மணிவாசகத்தின் சொந்த ஊரான தீவட்டிப்பட்டி அடுத்த ராமமூர்த்தி நகர் கிராமத்தில் ஆதரவாளர், உறவினர்கள் அஞ்சலி செலுத்திய பின் தகனம் செய்யப்பட்டது.

இதையும் படிங்க...கேரளாவில் மாணவர்கள் தண்ணீர் குடிக்க பெல்!

Intro: சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்ட மாவோயிஸ்ட் மணிவாசகத்தின் உடல் அவரின் ஆதரவாளர்கள் மற்றும் உறவினர்களின் இறுதி அஞ்சலிக்குப் பிறகு ராமமூர்த்தி நகரில் தகனம் செய்யப்பட்டது.

Body:சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி அடுத்த ராமமூர்த்தி நகர் பகுதியை சேர்ந்தவர் மணிவாசகம் . இவர் 35 ஆண்டுகளுக்கும் மேலாக மாவோயிஸ்ட் அமைப்பில் பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் அவர் கேரள மாநிலம் அட்டப்பாடி வனப்பகுதியில் நக்சல் தடுப்பு பிரிவு போலீசாரால் கடந்த மாதம் 29 ஆம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார் . பின்னர் அவரின் உடல் திருச்சி அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டு இருந்தது.

மணிவாசகரின் மரணம் குறித்து அவரின் தங்கை லட்சுமி மற்றும் அவரின் கணவருக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து அவர்கள் திருச்சூர் சென்று மணிவாசகரின் உடலை அடையாளம் காட்டி பெற்றுக் கொள்ள மறுத்தனர் . மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி விட்டு சேலம் திரும்பிய அவர்கள் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுத்தனர்.

மணிவாசகரின் மரணத்திற்கு காரணமான தமிழ்நாடு மற்றும் கேரளா போலீசார் உரிய விளக்கத்தை தர வேண்டும் உண்மையை கூற வேண்டும் என்று கூறி வழக்கு நடத்தினர்.

இதனால் 15 நாட்களாக அவரின் உடல் தகனம் செய்யப்படாமல் இருந்தது . இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அளித்த உத்தரவின் பேரில் மணி வாசகத்தின் உடல் அவரின் தங்கை இலட்சுமி இடம் நேற்றுமுன்தினம் ஒப்படைக்கப்பட்டது.

பின்னர், மாவோயிஸ்ட் மணி வாசகத்தின் உடல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று முன்தினம் , திருச்சூரில் இருந்து சேலம் அரசு தலைமை பொது மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டது.

மணி வாசகத்தின் மனைவி கலா மற்றொரு தங்கை சந்திரா ஆகியோர் ஏற்கனவே திருச்சி சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர். இவர்கள் இருவரும் அவரின் உடலை பார்த்து இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள பரோல் கேட்டு விண்ணப்பித்து இருந்தனர்.

அவர்களின் அருளுக்கு அனுமதி வழங்கி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதனையடுத்து நேற்று மாலை 7 மணிக்கு திருச்சியில் இருந்து கலா மற்றும் சந்திராவை போலீசார் அழைத்துக்கொண்டு சேலம் கிளம்பினர்.

இருவரும் மணிவாசகத்தின் உடலை சேலம் அரசு தலைமை பொது மருத்துவமனை பிணவறையில் இரவு 9 மணிக்கு பார்த்தனர். அதனைத் தொடர்ந்து மணிவாசகத்தின் உடல் ஆம்புலன்ஸில் சொந்த ஊரான தீவட்டிப்பட்டி அடுத்த ராமமூர்த்தி நகர் கிராமத்திற்கு போலீஸ் பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டது. ஆம்புலன்சு உடன் சந்திரன் மற்றும் கலா இருவரும் போலீஸ் பாதுகாப்புடன் ராமமூர்த்தி நகருக்கு அழைத்து வரப்பட்டனர்.

சேலத்தில் இருந்து ஒன்பது மணிக்கு புறப்பட்ட மணிவாசகம் உடல் எடுத்துச் செல்லப்பட்ட ஆம்புலன்ஸ் இரவு பதினொன்றரை மணி ஆன பிறகும் ராமமூர்த்தி நகருக்கு கொண்டு வரப்படவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த மணிவாசகத்தின் ஆதரவாளர்கள் ராமமூர்த்தி நகரில் கண்டன முழக்கங்கள் எழுப்பினர். இதனையடுத்து இரவு 11.45 மணிக்கு மணி வாசகத்தின் உடல் ராமமூர்த்தி நகருக்கு கொண்டு வரப்பட்டது.

இதனையடுத்து மணி வாசகத்தின் உடல் நேரே ராமமூர்த்தி நகர் மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரின் உடலுக்கு மாவோயிஸ்ட் அமைப்பின் ஆதரவாளர்கள் மற்றும் உறவினர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர் . பின்னர் இறுதி சடங்குகள் செய்யப்பட்டு அவரின் உடல் தகனம் செய்யப்பட்டது.

(பேட்டி: விவேக், ஒருங்கிணைப்பாளர், மாவோயிஸ்ட் சிறைவாசிகளின் விடுதலைக்கான அமைப்பு)

Conclusion:நள்ளிரவு 12.30 மணிக்கு மணி வாசகத்தின் உடல் தகனம் செய்யப்பட்டது . மணிவாசகத்தின் இறுதி சடங்கு நிகழ்வை ஒட்டி, ராமமூர்த்தி நகரில் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு ஈடுபடுத்தப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.