ETV Bharat / state

அரசு அறிவித்த பணம், அரிசி கிடைக்காமல் தற்கொலை - சேலத்தில் சோகம் - வறுமையால் சேலத்தில் தற்கொலை

சேலம்: கரோனா ஊரடங்கில் அரசு அறிவித்த 1000 ரூபாய் பணம், அரிசி ஆகியவை கிடைக்காமல், வருமானமின்றி தவித்து வந்த தேநீர் கடைத் தொழிலாளி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

வறுமையால் சேலத்தில் தற்கொலை
வறுமையால் சேலத்தில் தற்கொலை
author img

By

Published : May 4, 2020, 5:45 PM IST

கரோனா வைரஸ் தொற்றைத் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் குறிப்பாக தினக்கூலி வேலை செய்து வந்தவர்கள், வேலைகளுக்குச் செல்ல முடியாமல் மிகுந்த இன்னலுக்கு ஆளாகி உள்ளனர். இந்நிலையில் சேலம் கிச்சிப்பாளையம், குறிஞ்சி நகர் பகுதியைச் சேர்ந்த, அப்ரோஸ் என்ற தேநீர் கடைத் தொழிலாளி, வறுமை காரணமாக மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவருக்கு திருமணமாகி ஐந்து குழந்தைகள் உள்ளனர்.

ஊரடங்கு உத்தரவின் காரணமாக பணிக்குச் செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கி இருந்து வந்த அப்ரோஸின், கையிலிருந்த பணம் முழுவதும் காலியான நிலையில், உணவிற்காக அலைந்து நாட்களைக் கடத்தி வந்துள்ளார். வறுமையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில், இன்று அதிகாலை நான்கு மணி அளவில், வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் அப்ரோஸ்.

தற்கொலை செய்டு கொண்ட அப்ரோஸ்
தற்கொலை செய்டு கொண்ட அப்ரோஸ்

தகவல் அறிந்து வந்த காவல் துறையினர், அப்ரோஸின் சடலத்தை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து, அவரது மனைவியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து பேசிய அவரது உறவினர்கள், ”இந்த ஊரடங்கு உத்தரவால் அவர் எங்கும் பணிக்குச் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. மேலும் கையில் இருந்த பணம் முழுவதும் கரைந்து நாட்களை கடத்திட முடியாத இக்கட்டான சூழ்நிலையில் இருந்து வந்தார். உணவிற்காக பல்வேறு தரப்பினரிடம் அவர் சென்று உதவி கேட்ட நிலையில், எவரும் அவருக்கு எந்த ஒரு உதவியும் வழங்கவில்லை.

அரசு அறிவித்த ஆயிரம் ரூபாய் பணம், அரசு வழங்கிய அரிசி எதுவும் கிடைக்கவில்லை. இந்த ஊரடங்கு காரணத்தால் அவர் குடும்பம் வறுமையின் பிடியில் சிக்கித் தவித்து வருகிறது. இதனால் உணவிற்கு வழியின்றி அவர் தற்கொலை செய்துகொண்டார். மாநில அரசு அப்ரோஸின் குடும்பத்தினருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க முன்வர வேண்டும்” என கண்ணீருடன் தெரிவித்துள்ளனர்.

வறுமையின் காரணமாக ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: இட மாறுதலை ரத்து செய்ய அரசுக்கு மருத்துவர்கள் கோரிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.