ETV Bharat / state

'ரோசம்' இருந்தால் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுங்க.. உதயநிதிக்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி! - அதிமுக பொதுச்செயலாளர்

Edappadi K.Palaniswami: ஆளுமை இருந்தால் தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுங்கள் என அமைச்சர் உதயநிதிக்கு எடப்பாடி பழனிசாமி சவால் விடுத்துள்ளார்.

“திமுக ஆட்சிக்கு வந்து செய்த சாதனை உதயநிதியை அமைச்சராக்கியது தான்” - எடப்பாடி பழனிச்சாமி காட்டம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 22, 2023, 4:04 PM IST

சேலம்: சீலநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று (அக். 22) இஸ்லாமிய மற்றும் கிறிஸ்துவ மக்கள் 700க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சியில் இணைந்தவர்களை வாழ்த்தி வரவேற்றார்.

அப்போது அவர் கூறுகையில், “ திட்டமிட்டு சிறுபான்மை மக்களுக்கு ஆதரவாக இருப்பதாகச் செயற்கை தோற்றத்தை திமுகவினர் ஏற்படுத்தினார்கள். அதெல்லாம் இப்போது பொய்யாகப் போனது. பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது தமிழகத்தில் மட்டும் தான் சிறுபான்மை மக்களுக்குச் சிறு பாதிப்பு கூட ஏற்படாமல் அன்று முதல்வராக இருந்த ஜெயலலிதா செயல்பட்டார்.

அதிமுக கொள்கை மற்றும் கூட்டணி என்பது வேறு. அதிமுக கொள்கை என்பது நிலையானது. அதிமுகவிற்குச் சாதி மதம் என்பது கிடையாது. அதிமுகவினர் அனைவரையும் நேசிப்பவர்கள், அவர் அவர் மதம் அவர்களுக்கு புனிதமானது, அதில் யாரும் தலையிட முடியாது. அதிமுக பாஜகவிலிருந்து விலகிய பிறகு தான் ஸ்டாலினுக்கு இஸ்லாமியர்களைத் தெரிகிறது.

முதலமைச்சருக்குப் பயம்: ஸ்டாலினுக்குப் பயம் வந்துவிட்டது. திமுகவில் இருந்து அதிமுகவிற்கு வந்துவிடுவார்கள் என்று அச்சம் ஏற்பட்டுள்ளது. இஸ்லாமியர்களுக்குச் சிறு துரும்பைக் கூட கிள்ளி போடவில்லை, ஏதாவது நல்லது செய்திருந்தால் தான் இஸ்லாமியர்கள் திமுகவில் நீடிப்பார்கள், புனித நோன்புக்கு வழங்கப்பட்ட ரூ 6 கோடி நிதி ஒதுக்கீடு நிறுத்தப்பட்டிருந்தது, தகவல் அறிந்தவுடன் அதிமுக அரசு 2 கோடி உயர்த்தி ரூ 8 கோடியாக வழங்கியது .

ஹஜ் பயணத்திற்கு ரூ 15 கோடி நிதி ஒதுக்கீடு செய்தோம். மக்களோடு மக்களாக இருந்த காரணத்தினால் எந்த மக்களுக்கு என்ன பிரச்சனை என்பதை உணர்ந்து நன்மை செய்து வருகிறேன் . அதிமுக இஸ்லாமியர்களுக்கு எதிரானவர்களைப் போன்று ஸ்டாலின் கூறி வருகிறார்.

திமுக-பாஜக கூட்டணி: 1999ல் திமுக பாஜகவுடன் கூட்டணி வைத்து 5 ஆண்டுக் காலம் பதவி அனுபவித்தனர். முரசொலி மாறன் உடல் நலம் இல்லாமல் இருந்த போதிலும் இலாகா இல்லாத அமைச்சராக இருந்தார். சந்தர்ப்ப சூழல் காரணமாக அதிமுக பாஜகவுடன் கூட்டணி ஏற்பட்டது.

காவிரி விவகாரத்தில் போராடி நல்ல தீர்ப்பைப் பெற்றுத்தந்தோம், அதன் அடிப்படையில் தமிழகத்திற்குத் தேவையான தண்ணீரைப் பெற்றுத்தர திமுக அரசால் இயலவில்லை, முதலமைச்சர் கர்நாடகா சென்ற போது நட்பின் அடிப்படையில் 10 டிஎம்சி தண்ணீரைப் பெற்று இருந்தால் கூட பயிர் கருகி இருக்காது.

ஸ்டாலினுக்கு மனசாட்சி இல்லாமல் போனது, தமிழகத்திற்குத் தண்ணீர் தேவையை விட கூட்டணி தான் முக்கியமாகப் போனது. அரசி கிலோவிற்கு 10 ரூபாய் உயர்ந்துள்ளது, மளிகை பொருள் 40 விழுக்காடு வரை உயர்ந்துள்ளது , நிர்வாகத் திறமை இல்லாத காரணங்களால் சுமை அனைத்தும் மக்கள் தலையில் விழுகிறது.

திமுகவினர் போதைப் பொருட்களை விற்று வருவதால் அதனைத் தடுக்க முடியாத அவலம் ஏற்பட்டுள்ளது, எங்குப் பார்த்தாலும் போதை பழக்கங்களால் தமிழகம் சீரழிந்து வருவதைக் காணமுடிகிறது. தினந்தோறும் பெண்களிடம் செயின் பறிப்பு கொலை கொள்ளை என சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீரழிந்து வருகிறது.

அதிமுக பாஜக வின் B டீம் என திமுகவினர் கூறி வருகின்றனர் . நாங்கள் எப்போதும் ஒரிஜினல் டீம், பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று அறிவித்தோம். அது போன்ற தைரியம் திமுகவிற்கு இல்லை. அதிமுக ஆட்சியிலிருந்த போது கொண்டு வந்த திட்டங்களைத் தான் திறந்து வைத்து வருகின்றனர். நாங்கள் பெற்ற பிள்ளைக்கு அவர்கள் பெயர் வைத்து வருகின்றனர்.

நீட் விவகாரம்: நீட் விவகாரம் தொடர்பாக கையெழுத்து பெற்று வருகின்றனர் அதை எங்கு கொண்டு சேர்ப்பார்கள் நீட்டை எப்படித் தடுப்பார்கள். தேர்தல் நெருங்குவதால் மக்களை மீண்டும் மீண்டும் ஏமாற்ற நீட் கையெழுத்தை ஆயுதமாக பயன்படுத்தி போலியாகச் செயல்பட்டு மக்களை ஏமாற்றி வருகின்றனர்.

இந்த ஆட்சியில் உதயநிதியை மந்திரியாக்கியதைத் தவிர இரண்டரை ஆண்டுகளில் திமுக எந்த சாதனையும் செய்யவில்லை. ரோசம் இருந்தால், கொடுத்த வாக்குறுதியை முதலில் நிறைவேற்றுங்கள். தேர்தல் நேரத்தில் கூறியபடி நீட் தேர்வை ரத்து செய்யுங்கள்” என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: “நாடாளுமன்றத் தேர்தலுக்கு 5 மாநில தேர்தல் வெற்றி முன்னோட்டமாக இருக்கும்” - ஜோதிமணி எம்பி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.