ETV Bharat / state

சேலத்தில் கண்கவர் விளக்கு கண்காட்சி! - lighting fair in salem

சேலம்: கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, சேலம் பூம்புகார் விற்பனை நிலையத்தில் வெவ்வேறு வடிவிலான கண்கவர் விளக்குகள் இடம்பெற்றுள்ள கண்காட்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது.

சேலத்தில் கண்கவர் விளக்கு கண்காட்சி
சேலத்தில் கண்கவர் விளக்கு கண்காட்சி
author img

By

Published : Nov 23, 2020, 10:55 AM IST

Updated : Nov 23, 2020, 2:10 PM IST

தமிழர்களின் கலாசாரத்தில் மிக முக்கிய இடத்தை பிடித்துள்ளது கார்த்திகை தீபத் திருவிழா. கார்த்திகை மாத பௌர்ணமி நாளும் கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்த திருக்கார்த்திகை நாளில் தமிழர்கள் அவரவர் இல்லங்களில் வழிபாடு நடத்தியும், கோயில்களில் தீபங்கள் ஏற்றியும் தங்களது குடும்பத்தினருடன் தீபத் திருவிழாவைக் கொண்டாடி வருகின்றனர்.

தீபாவளி, நவராத்திரி ஆகிய பண்டிகைகளை தமிழர்கள் கொண்டாட தொடங்குவதற்கு முன்னதாகவே தமிழ்நாட்டில் கார்த்திகைத் திருவிழாவை கொண்டாடும் வழக்கம் இருந்துள்ளது என்பதை , சங்க இலக்கியத்தின் அகநானூறு பாடல்கள் அழகாக விவரிக்கின்றன.

சேலத்தில் கண்கவர் விளக்கு கண்காட்சி

தீபம் மற்றும் தீபாவளி என்றாலே வாழ்வின் இருள், தீமையை நீக்கி ஒளிதரும் பண்டிகை என்று பொருள்படும். இதனை புராணக்கதை ஒன்று அழகாக எடுத்துரைக்கிறது.
சேலம் மாவட்டத்தில் கார்த்திகை தீபத் திருவிழா பிரதான கோயில்களில் வெகு விமரிசையாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில், இந்த ஆண்டும் சேலம் அண்ணா பட்டு மாளிகை வளாகத்தில் இயங்கி வரும் பூம்புகார் நிலையத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வெவ்வேறு வடிவிலான கண்கவர் விளக்குகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
கண்காட்சி தொடர்பாக சேலம் பூம்புகார் விற்பனை நிலையத்தின் மேலாளர் நரேந்திர போஸ் கூறுகையில்," இந்த ஆண்டு சேலம் தீபத் திருவிழாவிற்காக புதிய வகை தீப விளக்குகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு கைத்தறித் தொழில்கள் வளர்ச்சி கழகத்தின் சார்பில் மாவட்டம் தோறும் பூம்புகார் உற்பத்தி நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.
கும்பகோணம் நாச்சியார் கோயில், மதுரை வாகைகுளம் ஆகிய இடங்களில் செயல்பட்டு வரும் பூம்புகார் உற்பத்தி நிலையங்களில் இருந்து அழகான வடிவங்களில் தயாரிக்கப்பட்ட அரை அடி முதல் 6 அடி வரையிலான அன்னம், பிரபை விளக்குகள், அரை அடி முதல் மூன்று அடி வரையிலான மலபார் விளக்குகள், கோயில்களில் பயன்படுத்தக்கூடிய வாச மாலை, தூண்டாமணி விளக்குகள், தொங்கு விளக்குகள், அகல் விளக்குகள், மங்கள தீப விளக்குகள், விநாயகர் விளக்குகள் , கிளை விளக்குகள், ரத தீபம்,கொடி தீபம் , அடுக்கு தீபம், பஞ்சாட்சர தீபம் , திருமலை அன்னம், மற்றும் சங்கு சக்கர தீபம் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட தீப விளக்குகள் பக்தர்களின் மனம் கவரும் வகையில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.
இந்த கண்காட்சி வரும் டிசம்பர் மாதம் 5ஆம் தேதி வரை நடைபெறும். இந்த ஆண்டும் வழக்கம் போல் வாங்கப்படும் விளக்குகள், பொருள்கள் அனைத்திற்கும் 10 சதவீதம் சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த ஆண்டின் விற்பனை இலக்கு சுமார் ரூ.5 லட்சம் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது" என்றார்.
தினமும் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெறும் இந்த கண்காட்சியை ஏராளமானோர் பார்வையிட்டு, தங்களுக்குத் தேவையான விளக்குகளை வாங்கிச் செல்கின்றனர்.

இதையும் படிங்க: கார்த்திகை தீபம் - தருமபுரியில் அகல்விளக்கு தயாரிப்பு மும்முரம்!

Last Updated : Nov 23, 2020, 2:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.