சேலத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட தவ்ஹீத் ஜமாஅத் இஸ்லாமிய அமைப்பினர் தேசிய கொடி ஏந்தி சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆகியவற்றை தமிழ்நாட்டில் அமல்படுத்தமாட்டோம் என தமிழ்நாடு அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றவேண்டும் என வலியுறுத்தினர்.
![Islamic groups organized a protest against caa protest in salem](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-slm-01-tntj-protest-vis-bite-script-7204525_18032020132631_1803f_00948_559.jpg)
இந்த ஆர்பாட்டம் குறித்து பேசிய தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தணிக்கை குழு உறுப்பினர் முகமது கனி, இஸ்லாமியர்களின் உரிமைகளுக்காக தாங்கள் அமைதியான முறையில் போராடி வருவதாகவும், தற்போது கரோனா வைரஸ் அச்சுறுத்தலால் தங்களது போராட்டங்களையும், கூட்டங்களையும் சில நாட்களுக்கு ஒத்திவைப்பதாகவும் தெரிவித்தார்.
போதிய அளவு மண்டபங்கள் கிடைக்கப்பெறாததால் சிறை நிரப்பும் போராட்டம் நிறுத்தப்பட்டதாகவும், அரசின் ஒத்துழைப்பிற்கேற்ப தங்களது அடுத்தகட்ட நடவடிக்கைகளை தொடர இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அரியலூரில் இஸ்லாமியர்கள் சிறை நிரப்பும் போராட்டம்