கரோனா தடுப்பு நடவடிக்கையால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்துள்ள வாடகை கார் ஓட்டுநர்கள், வாகன ஓட்டுநர்களுக்கு நிவாரணம் வழங்கிட வேண்டுமென வலியுறுத்தி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஓட்டுநர்கள் மனு அளித்தனர்.
கரோனா தடைக் காலத்தில் வாடகை கார் ஓட்டுநர்கள் வேலையின்றி தவித்து வரும் நிலையில், மத்திய மாநில அரசானது சாலை வரி, இன்சூரன்ஸ் ஆகியவற்றை வசூலிப்பதை ரத்து செய்ய வேண்டும் என்றும், வாகன கடனை கட்ட முடியாத சூழ்நிலை உள்ளதால் 8 மாத காலத்திற்கு லோன் கட்டுவதை தள்ளி வைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாகனத்திற்காக பெற்ற கடன் தொகைக்கான மாதாந்திர தவணையை உடனடியாக கட்ட வேண்டும் என தனியார் நிறுவனங்கள் சித்ரவதை செய்து வருவதால், ஓட்டுநர்கள் தற்கொலை செய்துகொள்ளும் நிலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக புகார் எழுந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் உள்ள வாடகை கார் ஓட்டுநர்கள் அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
வாடகை கார் ஓட்டுநர்களின் தற்கொலை சம்பவங்களை தடுத்து நிறுத்தி, கார் ஓட்டுநர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாடகை கார் ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
'வாடகை கார் ஓட்டுநர்களை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' - வாடகை கார் ஓட்டுனர்கள்
சேலம்: தமிழ்நாட்டில் தொடரும் ஓட்டுநர்களின் தற்கொலைகளை தடுத்து நிறுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாடகை கார் ஓட்டுநர்கள் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
!['வாடகை கார் ஓட்டுநர்களை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' கார் ஓட்டுனர்கள்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-07:05:03:1595597703-tn-slm-01-drivers-petition-vis-script-pic-7204525-24072020152821-2407f-1595584701-525.jpg?imwidth=3840)