சேலம் மாவட்டத்தில் வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்டுவந்த குட்கா, பான்மசாலா பொருட்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் கதிரவன் கூறுகையில், "சேலம் மாநகராட்சி கிச்சிபாளையம், வேல்முருகன் நகரில் உள்ள ஒரு வீட்டில், தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட பான் மசாலா பொருட்கள் விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் அப்பகுதியில் தீவிர சோதனை நடத்தப்பட்ட போது, ரவிச்சந்திரன் என்பவர் வீட்டில் 101 கிலோ பான்மசாலா பொருட்கள் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு சுமார் 3 லட்சமாகும். 2 உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டு உணவு பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. பகுப்பாய்வு அறிக்கையின் அடிப்படையில் உணவு பாதுகாப்பு சட்டத்தின் படி வழக்கு தொடரப்படும்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் 2022ஆம் ஆண்டில் இத்தனை சைபர் கிரைம் புகார்களா ? - டிஜிபி அறிவுரை