ETV Bharat / state

ஈபிஎஸ் கைது: சேலத்தில் அதிமுகவினர் சாலை மறியல்... - TN Govt

சென்னையில் ஈபிஎஸ் உள்பட அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து சேலத்தில் அதிமுகவின் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலத்தில் அதிமுகவினர் சாலை மறியல்
சேலத்தில் அதிமுகவினர் சாலை மறியல்
author img

By

Published : Oct 19, 2022, 3:52 PM IST

சேலம்: தமிழ்நாடு சட்டப்பேரவையில், நேற்று (அக் 18) நடைபெற்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தரப்பினரை அவையிலிருந்து வெளியேற்றி, ஒரு நாள் இடைநீக்கம் செய்து சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார்.

இதனையடுத்து ஈபிஎஸ் தரப்பினர் வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்த அனுமதி கோரிய நிலையில், காவல்துறை தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டது. இருப்பினும் காவல்துறையினரின் தடையை மீறி, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஈபிஎஸ் உள்பட அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் கறுப்பு உடை அணிந்து இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு ஈபிஎஸ் உள்பட அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் மற்றும் தொண்டர்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் சேலம் மாநகர மாவட்ட அதிமுக சார்பில் புதிய பேருந்து நிலையம் எதிரில், முன்னாள் எம்எல்ஏ வெங்கடாசலம் தலைமையில் சேலம் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் எம்பி பன்னீர்செல்வம் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் 100க்கும் மேற்பட்டோர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் நடத்தினர்.

அப்போது ஈபிஎஸ் மற்றும் ஆதரவு எம்எல்ஏக்கள் மீதான கைது நடவடிக்கையைக் கண்டித்தும், தமிழ்நாடு அரசைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினரின் பேச்சுவார்த்தைக்குப் போராட்டக்காரர்கள் உடன்படாததால், போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரத்திற்குப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சேலத்தில் அதிமுகவினர் சாலை மறியல்

இதையும் படிங்க: சபாநாயகர் நடுநிலைமையோடு செயல்படவில்லை - தடையை மீறி போராட்டம் நடத்திய ஈபிஎஸ் கடும் தாக்கு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.