ETV Bharat / state

திமுக - காங்கிரஸ் கூட்டணியில் பிளவா? யார் கூட்டணி தர்மத்தை மீறியது? - கூட்டணி தர்மத்தை மீறியதா திமுக

சில நாள்களாகவே திமுக - காங்கிரஸ் கூட்டணியில் சலசலப்பு கிளம்பியதையடுத்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவர் ரங்கராஜன் மோகன் குமாரமங்கலம் அறிக்கை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

dmk - Congress alliance issue
dmk - Congress alliance issue
author img

By

Published : Jan 13, 2020, 8:12 PM IST

தமிழ்நாட்டில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தொகுதி ஒதுக்கீடு விவகாரத்தில் திமுக, காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் கருத்து வேறுபாடுகள் நிலவியதாக செய்திகள் வெளியாகின. இது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ். அழகிரியிடம் கேட்டதற்கு, "எதுவுமே போலி இல்லை, எதிலும் உண்மை இல்லை, எதிலும் உண்மை இல்லாமலும் இல்லை" என மழுப்பலான பதிலைக் கூறினார்.

இதனிடையே திமுக கூட்டணியிலுள்ள கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி ஈஸ்வரனுக்கும் காங்கிரசுக்குமிடையே கருத்து மோதல்கள் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகி கொங்குமண்டல காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது .

இதுதொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் மோகன் குமாரமங்கலம் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அந்த அறிக்கையில்,"திமுக அலுவலகத்திற்கு வெளியே பத்திரிகையாளரைச் சந்திக்கும்போது, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன், உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி தர்மத்தை கடைப்பிடிக்கவில்லை என்று குற்றம்சாட்டினார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவர் ரங்கராஜன் மோகன் குமாரமங்கலம்

ஈஸ்வரன் நாமக்கல் மாவட்டத்தில் அவர் கட்சிக்கு கூட்டணியில் ஒதுக்கப்பட்ட மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு, தங்களிடம் பேச்சுவார்த்தைகூட நடத்தாமல் காங்கிரஸ் கட்சி அவர்களது வேட்பாளரை நிறுத்தினார்கள் என்று வருத்தத்துடன் தெரிவித்திருந்தார். நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தல் குறித்து ஒரு சில விஷயங்களை இந்தப் பதிவின் மூலமாக ஈஸ்வரனுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் தெளிவுப்படுத்த விரும்புகிறேன்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியால் நியமித்த உள்ளாட்சித் தேர்தலுக்கான பேச்சுவார்த்தைக் குழுவும் திமுகவின் நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளருக்குமிடையே டிசம்பர் 12ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை பேச்சுவார்த்தை நடந்தது.

ஐந்து நாட்கள் பேச்சுவார்த்தை நடந்த பிறகு, 17ஆம் தேதி இரவு ஒப்பந்தம் ஏற்பட்டது. அந்த ஒப்பந்ததில் நானும் திமுக செயலாளரும் கையெழுத்திட்டோம். அந்த ஒப்பந்தத்தின்படி ஆறாவது வார்டு வெண்ணந்தூர் வட்டாரம் சார்ந்த மாவட்ட ஊராட்சி உறுப்பினரிடம் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.

ஆனால், டிசம்பர் 18ஆம் தேதி காங்கிரஸ் கட்சியை அழைக்காமலும் கையொப்பமிடப்பட்ட ஒப்பந்தத்தை மீறியும் திமுக மாவட்ட செயலாளர் கொங்குநாடு தேசிய கட்சிக்கு அந்த மாவட்ட ஊராட்சி உறுப்பினர் இடத்தை ஒதுக்கினார். இத்துடன் காங்கிரஸ் கட்சி நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் கூட்டணியிலிருந்து வெளியேறியது.

இதையடுத்து டிசம்பர் 19ஆம் தேதி காலை காங்கிரஸ் கட்சியின் நாமக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் பத்திரிகையாளர்களைச் சந்தித்து நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறோம் என்று முடிவைப் பகிரங்கமாக வெளியிட்டார்.

எனவே நாமக்கல் மாவட்டத்தில் காங்கிரஸ், கூட்டணி தர்மத்துக்கு எதிராக ஒருபோதும் செயல்படவில்லை. ஒப்பந்தம் மீது கையெழுத்து போட்ட பிறகு கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்கிக் கொடுத்த இடத்தைக் கேட்டுப் பெற்றதற்கு, உங்கள் கட்சியின் செயல்பாடு கூட்டணி தர்மத்துக்கு புறம்பானதா? இல்லையா? என்று நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

காங்கிரஸ் எப்பொழுதும் தன் சொந்த சின்னத்தில் நின்று தனித்து துணிச்சலுடன் போட்டியிடுவதற்கு தயாராகவே இருக்கும். கூட்டணி அமைந்தால் அந்தக் கூட்டணிக்கு விசுவாசமாகவும் இருக்கும். நீங்கள் இதில் எந்த விதமான சந்தேகமும் பட வேண்டாம்.

உங்களுக்கும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் அனைத்து உறுப்பினர்களுக்கும் என்னுடைய பொங்கல் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

சென்னையில் மட்டுமல்லாது சேலம் உள்ளிட்ட கொங்கு மண்டலம் வரையிலும் திமுக - காங்கிரஸ் கூட்டணியில் கருத்து மோதல்கள் தொடர்வதாக எழுந்த புகாருக்கு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவர் ரங்கராஜன் மோகன் குமாரமங்கலம் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் என்று காங்கிரஸினர் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: 'டெல்டாவில் கோட்டைவிட்ட திமுக' - அதிமுகவுக்கு வாக்களித்த காங்கிரஸ், திமுக உறுப்பினர்கள்!

Intro:திமுக காங்கிரஸ் கூட்டணியில் பிளவா?

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவர் ரங்கராஜன் மோகன் குமாரமங்கலம் பரபரப்பு விளக்கம் Body:தமிழகத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதவி ஒதுக்கீடு விவகாரத்தில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் கருத்து வேறுபாடுகள் நிலவியதாகவும் செய்திகள் வெளியாகின.

இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி சென்னையில் ," எதுவுமே போலி இல்லை, எதிலும் உண்மை இல்லை, எதிலும் உண்மை இல்லாமலும் இல்லை" என மழுப்பலான விளக்கம் அளித்திருந்தார்.

இந்த நிலையில் திமுக கூட்டணியில் உள்ள கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி ஈஸ்வரனுக்கும் திமுகவுக்கும் காங்கிரசுக்கும் இடையே கருத்து மோதல்கள் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகி கொங்குமண்டல காங்கிரசார் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது .

இதுதொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவர் மோகன் குமாரமங்கலம் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

அந்த அறிக்கையில்,"
திராவிட முன்னேற்றக் கழகத்தின் அலுவலகத்திற்கு வெளியே பத்திரிக்கையாளரை சந்திக்கும்போது கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் திரு ஈஸ்வரன் அவர்கள் உள்ளாட்சித் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் கூட்டணி தர்மத்தை கடைப்பிடிக்கவில்லை என்று குற்றம்சாட்டினார்.

திரு ஈஸ்வரன் அவர்கள் நாமக்கல் மாவட்டத்தில் அவர் கட்சிக்கு கூட்டணியில் ஒதுக்கப்பட்ட ஒரு மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு பேச்சுவார்த்தை கூட நடத்தாமல் காங்கிரஸ் கட்சி ஒரு வேட்பாளரை நிறுத்தினார்கள் என்று வருத்தத்துடன் தெரிவித்தார்.

நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தல் குறித்து ஒரு சில விஷயங்களை இந்த பதிவின் மூலமாக திரு ஈஸ்வரன் அவர்களுக்கும் மற்றும் பத்திரிக்கையாளர் நண்பர்களுக்கும் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியால் நியமித்த உள்ளாட்சித் தேர்தலுக்கான பேச்சுவார்த்தைக் குழுவும் மற்றும் திராவிட முன்னேற்ற கழகத்தின் நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளருக்கும் இடையில் டிசம்பர் 12ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை பேச்சுவார்த்தை நடந்தது.

ஐந்து நாட்கள் பேச்சுவார்த்தை நடந்த பிறகு 17ஆம் தேதி இரவு ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது. அந்த ஒப்பந்ததில் நானும் திராவிட முன்னேற்ற கழகத்தின் செயலாளரும் கையெழுத்திட்டோம். அந்த ஒப்பந்ததின் படி ஆறாவது வார்டு வெண்ணந்தூர் வட்டாரம் சார்ந்து மாவட்ட ஊராட்சி உறுப்பினர் இடம் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இந்த அறிக்கையுடன் அந்த ஒப்பந்தத்தின் நகலை இணைத்துள்ளேன்.

டிசம்பர் 18ஆம் தேதி காங்கிரஸ் கட்சியை அழைக்காமல், கையொப்பமிடப்பட்ட ஒப்பந்தத்தை மீறி, திராவிட முன்னேற்ற கழகத்தின் மாவட்டச் செயலாளர் கொங்குநாடு தேசியக்கட்சிக்கு ஆறாவது வார்டு வெண்ணந்தூர் வட்டாரம் சார்ந்து மாவட்ட ஊராட்சி உறுப்பினர் இடம் ஒதுக்கினார். இத்துடன் காங்கிரஸ் கட்சி நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் கூட்டணியிலிருந்து வெளியேறியது.

19ஆம் தேதி காலை காங்கிரஸ் கட்சியின் நாமக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் பத்திரிக்கையாளர்களை சந்தித்து நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டி இடுகிறோம் என்று முடிவை பகிரங்கமாக வெளியிட்டார்.

எனவே நாமக்கல் மாவட்டத்தில் காங்கிரஸ் பேரியக்கம் கூட்டணி தர்மத்துக்கு எதிராக ஒருபோதும் செயல்படவில்லை. ஒப்பந்தம் மீது கையெழுத்து போட்ட பிறகு கூட்டணி கட்சிக்கு ஒதுக்கிக்கொடுத்த இடத்தை கேட்டு பெற்றதற்கு உங்கள் கட்சியின் செயல்பாடு கூட்டணி தர்மத்துக்கு புறம்பானதா இல்லையா என்று நீங்கள் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

இந்திய தேசிய காங்கிரஸ் எப்பொழுதும் தன் சொந்த சின்னத்தில் நின்று தனித்து துணிச்சலுடன் போட்டியிடுவதற்கு தயாராக இருக்கும். கூட்டணி அமைந்தால் அந்தக் கூட்டணிக்கு விசுவாசமாக இருப்போம். நீங்கள் இதில் எந்த விதமான சந்தேகமும் பட வேண்டாம்.

உங்களுக்கும் மற்றும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் அனைத்து உறுப்பினர்களுக்கும் என்னுடைய பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் " என்று தெரிவித்துள்ளார்.

Conclusion:சென்னையில் மட்டுமல்லாது சேலம் உள்ளிட்ட கொங்கு மண்டலம் வரையிலும் திமுக-காங்கிரஸ் கூட்டணியில் கருத்து மோதல்கள் தொடர்வதாக எழுந்த புகாருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவர் ரங்கராஜன் மோகன் குமாரமங்கலம் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் என்று சேலம் காங்கிரசார் தெரிவிக்கின்றனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.