சேலம் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன கல்வியாளர்கள் யோகா மூலம் மாணவர்களின் நினைவாற்றலை அதிகரிக்கும் ஆராய்ச்சி கட்டுரைகளை எழுதி வெற்றி கண்டதோடு தற்போது அதற்கு செயல் வடிவம் கொடுத்து இணையவழி பயிற்சியாக அளிக்க முயற்சி எடுத்து வருகின்றனர்.
இதில் முதல் கட்டமாக ஆசிரியர்களுக்கு ஜனவரி மாதம் கருத்தரங்கம், பணிமனைகள் நடத்தப்பட்டது. இந்நிலையில் இரண்டாம் கட்டமாக இன்று (பிப்.2) மாணவர்களை கொண்டு காணொலி பதிவு நடைபெற்றது.
மூன்றாம் கட்டமாக இப்பதிவுகள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயிற்சிக்காக இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட உள்ளன. இப்பயிற்சியில் மாவட்ட ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன உடற்கல்வி ஆசிரியர் பீட்டர் ஆனந்த், யோகா ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.