ETV Bharat / state

தாய்க்கு இறப்புச் சான்றிதழ் தராத விவகாரம்; குழந்தைகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு - DEATH CERTIFICATE NOT ISSUED EVEN AFTER 6 YEARS

சேலம்: குமாரபாளையத்தில் தாய் இறந்து ஆறு வருடம் ஆகியும் இறப்புச் சான்றிதழ் தராததால் குழந்தைகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

குழந்தைகள் மனு
author img

By

Published : May 6, 2019, 9:00 PM IST

சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் குமாரபாளையம், காட்டுக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் சபரி சந்துரு. இவருக்கு தம்பி பிரவீன் குமார் மற்றும் தங்கை சுவேதா உள்ளனர். இவருடைய தாய் தந்தையினர் 6 வருடத்திற்கு முன்பு தற்கொலை செய்து கொண்டனர். தந்தையின் இறப்புச் சான்றிதழ் மட்டுமே அரசு அலுவுலர்கள் தந்துள்ளதாகவும் இதுவரை தாயின் இறப்பு சான்றிதழ் தரவில்லை எனவும் சபரி சந்துரு குற்றம்சாட்டியுள்ளார்.

குழந்தைகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

இதுகுறித்து அவர் கூறுகையில், "இதனால் தம்பி தங்கைகளை பள்ளியில் சேர்க்க அவர்களுக்கான ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் போன்ற அரசின் ஆவணங்கள் வாங்குவதில் சிக்கல் உள்ளது. மருத்துவமனை தரப்பில் கேட்டபோது தாயின் இறப்பு ஆவணம் தொலைந்து விட்டதால் அதனை கொடுக்க இயலவில்லை என அஜாக்கிரதையாக பதில் அளித்தனர். ஆகவே, மாவட்ட ஆட்சியரிடம் எங்கள் தாயின் இறப்புச் சான்றிதழை பெற்று தருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளோம்" என்றார்.

sample description
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.