உலகம் முழுவதும் கரோனா வைரஸ் தொற்றால் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, கொரோனா வைரஸை மத்திய அரசு, தேசியப் பேரிடராக அறிவித்துள்ளது. மாநில சுகாதாரத் துறையினர் முக்கிய இடங்களில் முகாமிட்டு தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் பயணிகளை விமான நிலைய அலுவலர்கள் தீவிர சோதனை செய்து வருகின்றனர். பயணிகள் செல்லும் பாதைகளிலும் கிருமிநாசினியை சுகாதாரத்துறை அலுவலர்கள் தெளித்தனர்.
இந்நிலையில், சேலம் விமான நிலையத்தில் பயணிகளுக்கு கரோனா வைரஸ் தொற்று உள்ளதா என சுகாதாரத் துறையினர் முகாம் அமைத்து தீவிரமாக பரிசோதனை செய்தனர். பயணிகளின் முழுமையான பரிசோதனைகளுக்குப் பின்னரே அவர்கள் விமான நிலையத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.
இதையும் படிங்க: கொரோனா பீதி: கோவை ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களுக்கு கிருமி நாசினி தெளிப்பு