சேலம் நுகர்பொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் சார்பில் கருப்புச்சட்டை அணிந்து மத்திய, மாநில அரசுகளை கண்டித்து போராட்டம் நடைபெற்றது.
தொடர்ந்து சேலம் நுகர்பொருள் விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் நாகேஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "எப்எம்சிஜி தயாரிப்பு நிறுவனங்களின் இரட்டை விலை கொள்கைகளைக் கண்டித்து விநியோகஸ்தர்களும், பணியாளர்களும் கருப்புச்சட்டை அணிந்து முதற்கட்ட போராட்டத்தை நடத்தினோம்.
பாரம்பரியமாகவே விநியோகஸ்தர்கள் மூலமாக நடைபெறும் சில்லறை வணிகத்தில் அதிக விலையும் ஆன்லைன் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சலுகை விலையும் மத்திய, மாநில அரசுகள் அளித்துள்ளன. அகில இந்திய அளவில் விரைவாக விற்பனையாகும் அத்தியாவசிய பொருள்கள் 90 விழுக்காடு சில்லறை மற்றும் மொத்த விற்பனை மூலமாகவே நடக்கிறது. 10 விழுக்காடு மட்டுமே ஆன்லைன் மூலம் நடக்கிறது.
ஆனால், பத்து விழுக்காடு அளவிற்கு விற்பனை செய்யும் ஆன்லைன் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மட்டுமே மத்திய, மாநில அரசுகள் சலுகை வழங்கி உள்ளன. எனவே இந்த இரட்டை விலை கொள்கையை மாற்றிக் கொள்ள தவறினால் தமிழ்நாடு நுகர்பொருள் விநியோகஸ்தர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு , மற்ற சில்லறை வணிகர் சங்கங்களுடன் இணைந்து தீவிர போராட்டத்தை நடத்துவோம்" என எச்சரித்தார்.
இதையும் படிங்க: உருமாறிய கரோனா வைரஸ் வேகமாக பரவும் - பேராசிரியர் சீனிவாசன்