ETV Bharat / state

பாலியல் தொந்தரவால் இளம்பெண் தற்கொலை: போலீஸ் விசாரணை!

ராமநாதபுரம்: பரமக்குடி அருகே பாலியல் தொந்தரவு காரணமாக இளம்பெண் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

பாலியல் தொந்தரவால் இளம்பெண் தற்கொலை: போலீஸ் விசாரணை!
பாலியல் தொந்தரவால் இளம்பெண் தற்கொலை: போலீஸ் விசாரணை!
author img

By

Published : May 5, 2021, 8:32 PM IST

ராமநாதபுரம் மாவட்டம் கொட்டகை கிராமத்தைச் சேர்ந்தவர் ரேஷ்மா (20). இவருக்கும் பரமக்குடி அருகேவுள்ள செல்லூர் கிராமத்தைச் சேர்ந்த விமல்ராஜ் என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆகியுள்ளது.

இவர்களுக்கு 3 வயதில் பெண் குழந்தையும், 10 மாத ஆண் குழந்தையும் உள்ளனர். ரேஷ்மாவை செல்லூர் கிராமத்தைச் சேர்ந்த ஒரு சில இளைஞர்கள் தொடர்ந்து செல்ஃபோனில் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த ரேஷ்மா இன்று (மே 5) வீட்டில் தனிமையில் இருந்தபோது தன் குழந்தையின் தொட்டில் கயிற்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலைக்கு முன்பாக தன் மரணத்திற்கு பாலமுருகன், முத்துக்குமார் ஆகியோர் காரணம் எனவும், தென்னரசு என்பவர் காரணமில்லை எனவும் கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இச்சம்பவம் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், ரேஷ்மாவின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.