ராமநாதபுரம் மாவட்டம், வெண்ணந்தூர் மேட்டுக்கொள்ளை பகுதியைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி பாண்டி. இவரது மனைவி கார்த்திகா. இந்தத் தம்பதிக்கு ஆறு வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. பாண்டி குடும்பச் சூழல் காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேலைக்காக வெளிநாடு சென்றார். இதனால் தாயும் மகளும் மட்டும் வீட்டில் வசித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில், யாஸ் புயல் எதிரொலியாக, ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பலத்த சூறைக்காற்று அடித்து வரும் நிலையில், பாண்டியின் வீட்டின் முன்பு நின்ற பனை மரம் சாய்ந்து கார்த்திகாவின் மீது விழுந்தது. இதில் கார்த்திகா சம்பவ இடத்திலேயே நிலைதடுமாறி கீழே விழுந்து உயிரிழந்தார்.