தனுஷ்கோடி பகுதிக்கு செப்டம்பர் நான்காம் தேதி சட்டவிரோதமாக வந்த பிரதீப் குமார பண்டாரேவை, கப்பற்படை காவல் துறையினர் கைது செய்தனர். பின்னர் அவரை தனுஷ்கோடி காவல் நிலையத்தில் வைத்து மாநில உளவுத்துறை அலுவலர்கள் தீவிர விசாரணை நடத்தினர்.
அதில் அவர் இலங்கை கொழும்புப் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றியது தெரிய வந்தது. மேலும் தனது அண்ணன் மூலம் காவல் நிலையத்தில் இருந்த 20 கிலோ பிரவுன் சுகரை விற்பனை செய்ததும், கைதில் இருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ள சட்டவிரோதமாக படகு மூலம் தனுஷ்கோடி வந்ததும் தெரிய வந்தது.
இதனைத்தொடர்ந்து பாஸ்போர்ட் சட்டத்தில் கப்பற்படை காவல் துறையினர் கைது செய்து ராமேஸ்வரம் நீதிமன்ற நீதிபதி விஜய் முன் ஆஜர்படுத்தினர். இவ்வழக்கை விசாரித்த நீதிபதி செப்டம்பர் 18ஆம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். பின்னர் அவர் சென்னை புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இதையும் படிங்க: சினிமா பட பாணியில் நடந்த சேஷிங்: மணல் திருடிய ஜேசிபி ஓட்டுநர் கைது