ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த ஆண்டு மே மாதத்தில் மட்டும் நடைபெறவிருந்த ஆறு குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டிருப்பதாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ராமநாதபுரம் மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் வசந்தகுமார் கூறியதாவது, "ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரின் அறிவுறுத்தலின்படி குழந்தைகள் திருமணம் தடுத்து நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறோம்.
அதன்படி கடந்த மே மாதத்தில் 1098 என்ற எண்ணிற்கு வந்த அழைப்பின் அடிப்படையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் கீழக்கரையில் இரண்டு திருமணங்கள், முதுகுளத்தூர், பரமக்குடி, கமுதி, மண்டபம் ஆகிய பகுதிகளில் ஒரு திருமணம் என மொத்தமாக ஆறு குழந்தைகள் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
தொடர்ந்து குழந்தைத் திருமணம் குறித்து விழிப்புணர்வு அவர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார். மேலும், கரோனாவால் பெற்றோரை இழந்தக் குழந்தைகளைப் பற்றிய தகவலை திரட்டும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.