ETV Bharat / state

இறால் மீன்களுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: மீனவர்கள் கோரிக்கை! - Ramanathapuram district news

ராமநாதபுரம்: ஏற்றுமதி மீன் வகைகளான இறால் மீன்களுக்கு உரிய விலை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மீனவர்கள் கோரிக்கை
மீனவர்கள் கோரிக்கை
author img

By

Published : Aug 29, 2020, 7:48 PM IST

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுக அலுவலகத்தில் இன்று (ஆக. 29) மீன்வளத்துறை உதவி இயக்குநர் ராஜேந்திரன் தலைமையில் விழிப்புணர்வுக் கூட்டம் நடைபெற்றது.

இதில் மீன்வளத்துறை ஆய்வாளர் பாலமுருகன், மீன்வளத்துறை அலுவலர்கள், மீனவ பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் எல்லைதாண்டி மீன் பிடித்தால் ஏற்படக்கூடிய பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

மீனவர்கள் கோரிக்கை

இதுகுறித்து மீனவர் சங்கப் பிரதிநிதி எமிரேட் கூறும்போது, " இரவு நேரங்களில் கடலில் காற்று காரணமாக சில படகுகள் இலங்கை எல்லைக்குள் செல்வது தவிர்க்க முடியாத சூழலாக இருந்துவருகிறது. இதுதொடர்பாக மீனவ பிரதிநிதிகள் கூட்டத்தைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தற்பொழுது அனைத்து மீன்பிடி பொருள்களின் விலை கடுமையாக உயர்ந்து உள்ளது. இதன் காரணமாக மிகப்பெரிய அளவில் மீனவர்கள் நஷ்டத்தை சந்தித்து வருகிறோம். ஏற்றுமதி மீன் வகைகளான இறால் மீன்களுக்கு உரிய விலை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கூறினார்.

இதையும் படிங்க: மீன் குட்டையை உப்பு இறால் குட்டையாக மாற்ற எதிர்ப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.