ராமநாதபுரம் மாவட்டம் கேணிக்கரையைச் சேர்ந்த பிச்சை மணிமாறன் மனைவி பிரேமா (60). இவர் தனது மகன் ரமேஷ், மருமகள், குழந்தைகளுடன் நேற்று முன்தினம் காரில் மதுரை சென்று பொங்கல் கொண்டாடினர். இதனையடுத்து மாலை ரமேஷ் தனது தாயார் பிரேமாவை மட்டும் அழைத்துக் கொண்டு தனது காரில் ராமநாதபுரம் திரும்பியுள்ளார்.
காரை ஓட்டி வந்த ரமேஷ், பரமக்குடி அருகேயுள்ள திருவரங்கி தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது திடீரென கார் நிலை தடுமாறி அருகேயுள்ள பள்ளத்தில் பாய்ந்தது. அப்போது சாலையோரம் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த திருவரங்கி கிராமத்தைச் சேர்ந்த சிவக்குமார் (57) என்பவர் மீது மோதிவிட்டு பள்ளத்தில் பாய்ந்துள்ளது.
இந்த விபத்தில் சிவக்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். காருக்குள் இருந்த பிரேமா பலத்த காயத்தோடு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பள்ளத்தில் பாய்ந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பரமக்குடி தீயணைப்புத் துறையினர் தீயை முழுமையாக அணைத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த பரமக்குடி காவல் துறை துணை கண்காணிப்பாளர் சங்கர், பார்த்திபனூர் காவல் துறையினர் இறந்தவர்களின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
திருவள்ளுர் காவி உடை ட்வீட் - அலுவலக ஊழியர் செய்த தவறு; வெங்கையா நாயுடு விளக்கம்!
காரை ஓட்டி வந்த ரமேஷ் சீட் பெல்ட் அணிந்திருந்ததால் காயமின்றி உயிர் தப்பினார். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் காவல் துறையினர் ரமேஷிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.