ராமேஸ்வரம்: வங்கக் கடலில் புதிதாக உருவாக்கியுள்ள புயல் சின்னம் காரணமாக ராமநாதபுரம் மாவட்டம் கடலோர பகுதிகளான தேவிபட்டணம், சோழிய குடி, தொண்டி, தங்கச்சிமடம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முதல் கனமழை விட்டு விட்டுப் பெய்து வருகிறது.
மேலும், ராமேஸ்வரம் தீவு பகுதிகளான பாம்பன், தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதிகளில் அதிக காற்றும் கடல் சீற்றமும் உருவாகி உள்ளது. இதன் காரணமாக ராமேஸ்வரத்தில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம் போல் தேங்கியுள்ளது. இதனைக் கடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
மீனவர்களுக்கு எச்சரிக்கை: இந்நிலையில் புதியதாக உருவாகியுள்ள மிக்ஜாம் புயல் காரணமாக மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும், கரையோரம் நின்று கரை வலை மூலம் மீன்பிடிக்கும் தொழிலிலும் ஈடுபட வேண்டாம். மீனவர் தங்கள் படகைப் பாதுகாப்பாக நங்கூரமிட்டு கடல் பகுதியில் நிறுத்தி வைக்கவும் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: சேலத்தில் சட்ட விரோதமாக கடத்தப்பட்ட 2500 கிலோ வெடி மருந்துகள் பறிமுதல்..!