ETV Bharat / state

சங்கிலித் திருடனைப் பிடித்த காவலர்களுக்கு ராமநாதபுரம் எஸ்.பி. பாராட்டு! - Ramanathapuram SP karthik

ராமநாதபுரம்: ஒரு ஆண்டிற்கு முன்பு சங்கிலித் திருட்டில் ஈடுபட்ட திருடனைப் பிடித்த தனிப்படை காவலர்களுக்கு எஸ்.பி. கார்த்திக் பாராட்டு தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம் எஸ்.பி கார்த்திக்  சங்கிலி திருட்டு  ராமநாதபுரம் சங்கிலி திருட்டு  Ramanathapuram SP praises chain santcer arrest police  Ramanathapuram SP karthik  chain snatching
Ramanathapuram SP karthik
author img

By

Published : Dec 11, 2020, 12:07 PM IST

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த குமார் என்பவரின் மனைவி நாகலெட்சுமி 2019 ஆம் ஆண்டு தங்கச்சிமடம் அருகேயுள்ள சந்தியாகப்பர் கோயில் அருகே சென்றுகொண்டிருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் ஏழு சவரன் தங்கத் தாலிச் சங்கிலியைப் பறித்துச் சென்றனர்.

இது தொடர்பாக தங்கச்சிமடம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்றுவந்தது. இந்நிலையில், இவ்வழக்கினை ராமேஸ்வரம் குற்றப்பிரிவு காவல் துறையினர் தீவிரமாக விசாரணை செய்ததில், இச்சம்பவத்தில் ஈடுபட்டது வழுதூர் கிராமத்தைச் சேர்ந்த சரவணக்குமார், ரவுனி வலசையைச் சேர்ந்த பிரகாஷ் என்பதைக் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து, காவல் துறையினர் சரவணக்குமாரைப் பிடித்து விசாரித்தபோது, சரவணக்குமாரும், பிரகாசும் இருசக்கர வாகனத்தில் வந்து நாகலெட்சுமியிடம் ஏழு சவரன் தங்கத் தாலிச் சங்கிலியைப் பறித்துச் சென்றதை ஒப்புக் கொண்டனர்.

சரவணக்குமாரிடமிருந்து ஏழு சவரன் தாலிச் சங்கிலி மீட்கப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார். இவ்வழக்கில் தலைமறைவாகவுள்ள பிரகாஷை காவல் துறையினர் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.

இக்குற்றச் சம்பவம் நடந்து ஒருவருடத்திற்குப் பின்னர், திறமையாகத் துப்புதுலக்கி, 7 சவரன் தாலிச் செயினை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்த, ராமேஸ்வரம் குற்றப்பிரிவு சார்பு ஆய்வாளர் முத்துமுனியசாமி தலைமையிலான தனிப்படையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் பாராட்டினார். இது மக்கள் மத்தியில் காவல் துறையினர் மீதான நம்பிக்கையை அதிகப்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: கடன் தொல்லையால் ஓட்டுநர் தீக்குளித்து தற்கொலை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.