ETV Bharat / state

'மீனவர் கார்சன் உடல் உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டது' - அமைச்சர் ஜெயக்குமார் - chennai latest news

சென்னை: கடலில் தவறி விழுந்து இறந்த மீனவர் கார்சன் உடல் கடல் மார்க்கமாக தமிழ்நாட்டிற்கு கொண்டு வரப்பட்டு உறவினரிடம் நல்லடக்கத்திற்காக ஒப்படைக்கப்பட்டது என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

_fishermen_death
_fishermen_death
author img

By

Published : Oct 7, 2020, 7:50 AM IST

இதுதொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த மீனவர் கார்சன், செப்டம்பர் 30ஆம் தேதியன்று விசைப்படகில் 7 மீனவர்களுடன் மீன்பிடிக்கச் சென்றுள்ளார். கடலில் வலை இறக்கும் போது கடலில் தவறி விழுந்து காணாமல் போய்விட்டார். காணாமல் போன மீனவரை கண்டுபிடிக்க உடனடியாக மீன் வளத்துறை, இந்திய கடலோர காவல் படை, உள்ளூர் மீனவர்கள் உதவியுடன் தேடல் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வந்தது.

ஆனால், அக்டோபர் 4ஆம் தேதியன்று இலங்கை அல்லைப்பிட்டி என்ற கடற்கரைப் பகுதியில் காணாமல் போன மீனவரின் உடல் கரை ஒதுங்கி உள்ளதாக இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகம் வழியாக தகவல் பெறப்பட்டது. இதைத்தொடர்ந்து தமிழ்நாடு அரசு உடனடியாக இறந்த மீனவரின் உடலை நல்லடக்கம் செய்வதற்காக, தமிழ்நாடு கொண்டுவர அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டது. இதன்பலனாக இறந்த மீனவர் உடல், கடல் மார்க்கமாக இலங்கை அரசால் தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்கப்பட்டு, நல்லடக்கத்திற்காக உறவினர்களிடம் வழங்கப்பட்டது" எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதையும் படிங்க:

இலங்கையில் கரை ஒதுங்கிய மீனவர் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.