ராமநாதபுரம் மாவட்டம் முதுல்நாள், பொக்ரானேந்தல் உள்ளிட்ட 71 கிராமங்களில் புதிதாக நடமாடும் நியாயவிலைக் கடைகள் தொடங்கிவைக்கும் நிகழ்ச்சி இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
தொடக்க நிகழ்ச்சி
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் முனியசாமி, சட்டப்பேரவை உறுப்பினா்கள் மணிகண்டன், சதன் பிரபாகரன் ஆகியோர் கலந்துகொண்டு மக்கள் பயன்பாட்டிற்கு தமிழ்நாடு அரசின் நியாயவிலைக் கடைகளை கொடியசைத்து தொடங்கிவைத்தனர்.
நியாயவிலைக் கடைகளின் செயல்பாடு
இது குறித்து வருவாய், கூட்டுறவுத் துறை அலுவலர்கள் கூறுகையில், "இந்த நடமாடும் நியாயவிலைக் கடைகள் மூலமாக 11 ஆயிரத்து 205 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவார்கள். நியாயவிலைக் கடை இல்லாத கிராமங்களுக்கு இந்த நடமாடும் நியாயவிலைக் கடை வாகனம் செல்லும்.
கூட்டம் அதிகமாக உள்ள நியாயவிலைக் கடைகளுக்கு கூடுதல் கடைகளாக, இந்த நடமாடும் நியாயவிலைக் கடை செயல்படும்" என்றனா்.
இதையும் படிங்க: அம்மா நகரும் நியாயவிலைக் கடை: அமைச்சர்கள் தொடங்கிவைப்பு