ராமநாதபுரம்: கடந்த சில நாட்களாக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 100 ரூபாய்க்கு மேல் உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியிருக்கும் நிலையில், இந்த திடீர் விலை உயர்வுக்கு பல்வேறு தரப்பினர் தங்களது கண்டனத்தை பதிவு செய்துவருகின்றனர்.
இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பேருந்து நிலையம் முன்பாக, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் சிலிண்டருக்கு மாலை அணிவித்தும், விறகு அடுப்பில் சமைத்தும் இன்று (டிச.20) போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
இதையும் படிங்க: தொடர்ந்து உயரும் சமையல் எரிவாயு விலை - பொதுமக்கள் அவதி