தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள அரசியல் தொடர்பான சுவரொட்டிகள் அகற்றும் பணியினை ஆய்வு செய்தார்.
அப்போது, அங்கு ஒரு கழிவறையை ஆய்வு செய்த ஆட்சியர் அக்கழிவறை சுகாதாரமற்று, துர்நாற்றம் வீசியதையடுத்து சம்பந்தப்பட்ட அலுவலர்களை அழைத்து சரமாரி கேள்வி எழுப்பினார். பின்னர், உடனடியாக கழிவறையின் தரத்தை மாற்ற வேண்டும் என்று அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: திமுக நேர்காணல் தேதி அறிவிப்பு