ராமநாதபுரம்: கமுதியில் நகைக் கடை வைத்திருப்பவர் கணேசன்(70). இவர் அதே பகுதியில் தனது மனைவி, மகன், மருமகள், பேரக் குழந்தைகளுடன் கூட்டுக் குடும்பாக வசித்துவருகிறார்.
கணேசன் நேற்று (ஜூன். 28) தனது 70ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். இதை முன்னிட்டு அவரது மருமகள் சரண்யா 70 வகையான உணவுப் பண்டங்களை செய்து, அவருக்கு பரிமாறியுள்ளார்.
இட்லி, இனிப்பு பலகாரங்கள் தொடங்கி, புளி சாதம், தயிர் சாதம், எலுமிச்சை சாதம் என சாதங்கள் தொட்டு பருப்பு வடை, உளுந்து வடை என வகை வகையாய் உணவுகள் சமைத்து அவற்றை பூப்போட்ட சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்ட கட்டிலில் வரிசையாக அடுக்கி வைத்திருந்தார்.
பிரியாணி சாப்பிட ஆசை...! கரோனா வைத்தது பூசை...!
இதை பிறந்தநாள் விழாவிற்கு வந்த உறவினர்கள் பார்த்து வியந்துள்ளனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தற்போதைய சூழலில் வீட்டிலிருக்கும் முதியவர்களை வீட்டை விட்டே துரத்தி விடும் ஒரு சிலர் மத்தியில் முதியவர் கணேசனுக்கு குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாடி மகிழ்ந்த அவர்களது குடும்ப உறுப்பினர்களின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 'களியும் கறிக்குழம்பும்' - எளிய மக்களின் வலிமையான உணவு