ராமநாதபுரம்: கரோனா 2ஆவது அலையில் நோய்த்தொற்றால் அதிகமானோர் பாதிக்கப்பட்டனர். தொற்று பாதிப்பின் தீவிரத்தைக் குறைக்க, மாவட்ட நிர்வாகம் தடுப்பூசி குறித்து நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்திவருகின்றனர்.
மாவட்ட சுகாதாரத் துறையுடன் இணைந்து, கீழக்கரை மக்கள் அமைப்பு சார்பில் இன்று (ஜூன்.22) கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. மாவட்டத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், சிறப்பு முகாம்களில் தடுப்பூசி போடப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், பொது மக்களுக்குத் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தடுப்பூசி போட வந்த 10 நபர்களுக்கு எவர்சில்வர் பாத்திரம் பரிசாக வழங்கப்பட்டது.
அதேபோன்று தடுப்பூசி போட வந்தவர்களுக்கு டோக்கன் கொடுக்கப்பட்டு, குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று நபர்களுக்கு இரண்டாயிரம் ரூபாய் மதிப்பிலான மின்விசிறி வழங்கப்பட்டன.
பரிசு வழங்கி தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்ட சம்பவம் பாராட்டைப் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: நீட் தேர்வு பாதிப்புகள் குறித்து கருத்து கேட்பு: நாளை கடைசி நாள்!