ராமநாதபுரம்: சாயல்குடி அடுத்து வாகைக்குளம் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு தொடக்கப்பள்ளியில் 42 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று (மார்ச் 1) மாணவ, மாணவிகள் வழக்கம்போல் பள்ளிக்குச் சென்றுள்ளனர்.
மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து
மாணவ, மாணவிகள் வகுப்பறையில் அமர்ந்து பாடம் படித்துக்கொண்டிருந்தபோது திடீரென மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் நான்காம் வகுப்பு பயிலும் மாணவி வைஷ்ணவி, இரண்டாம் வகுப்பு பயிலும் மாணவர் அகிலேஷ் ஆகியோருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இருவரையும் ஆசிரியர்கள் சாயல்குடி அரசு ஆரம்பச் சுகாதார மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதலுதவி அளித்தனர்.
2 மாணவர்கள் படுகாயம்
பின்னர் மேல் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு மாணவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.
அங்கு அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: உக்ரைனில் இந்தியர் பலி: மாணவரின் தந்தைக்கு ஆறுதல் கூறிய பிரதமர்