ETV Bharat / state

நிறைவுக்கு வரும் மீன்பிடி தடைக்காலம்; கடலுக்கு செல்ல தயாராகும் மீனவர்கள்! - ராமேஸ்வரம் மீனவர்கள்

ராமேஸ்வரம்: மீன்பிடி தடைக்காலம் நிறைவுக்கு வர உள்ளதால், மீண்டும் கடலுக்குள் செல்ல மீனவர்கள் படகுகளை தயார்படுத்தும் பணியில் தீவிரமாக உள்ளனர்.

sea
author img

By

Published : Jun 7, 2019, 4:29 PM IST

ராமநாதபுரம் மாவட்டத்தில் மிகப்பெரிய வருவாயாக இருந்து வருவது மீன்பிடியும், அதன் சார்ந்த தொழில்களும்தான். இங்கிருந்து ஆண்டுக்கு சுமார் 1 மெட்ரிக் டன் மீன் ஏற்றுமதி செய்து வருகிறது. கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி மீன்பிடி தடை காலம் துவங்கியது. இதனால் மீனவர்கள் படகுகள் அனைத்தையும் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டு பழுது பழுது நீக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

தங்களது படகுகளில் பழுதாகி உள்ள இன்ஜின்கள், வர்ணம், பலகைகள் மாற்றுதல், உள்கட்டமைப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் மொத்தம் உள்ள 5,000 விசைப்படகுகளில் ராமேஸ்வரத்தில் மட்டும் 700 படகுகள் உள்ளன. ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரம், பாம்பன் மண்டபம் பகுதியில் 1500 மேற்பட்ட விசைப்படகுகள் உள்ளன. இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் படகுகளை சீரமைக்கும் பணியில் படகு உரிமையாளர்கள் வேகம் காட்டி வருகின்றனர்.

இது குறித்து மீனவர்கள் கூறுகையில், "பாதிக்கும் மேற்பட்ட படகுகள் பழுது சரி செய்து கடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன. மீதி படகுகள் ஜூன் 15ஆம் தேதிக்குள் தயாராகிவிடும். மீன்பிடி தடைக்கால நிவாரண தொகை தற்போது வரை தங்களுக்குக் கிடைக்கவில்லை. அது எப்போதுமே கடலுக்கு திரும்பிச் சென்ற பிறகே தொகை வந்து சேர்கிறது" என்று குற்றச்சாட்டினர்.

நிறைவுக்கு வரும் மீன்பிடி தடைக்காலம்; கடலுக்கு செல்ல தயாராகும் மீனவர்கள்!

இது குறித்து மீன்வளத்துறை கூடுதல் இயக்குனர் டாம் வர்கீஸ் கூறுகையில், "இந்தாண்டு முதல் நிவாரண கால தொகை நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் 33 இ-சேவை மையங்கள் திறக்கப்பட்டு அதில் மீனவர்களின் ஆவணங்கள் பெறப்பட்டு வருகிறது. ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த நிவாரணத் தொகை பெற்றுள்ளனர். தேர்தல் நடத்தை விதி அமலில் இருந்ததால், தாமதம் ஏற்பட்டது. மீனவர்களின் ஆவணங்கள் பதிவேற்றும் பணி நடைபெற்று வருகிறது. முடிவடைந்தவுடன் நேரடியாக வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்" என்றார்.

Intro:கடலுக்கு திரும்ப தயாராகிக் கொண்டிருக்கும் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள்

Body:ராமநாதபுரம் மாவட்டத்தில் மிகப்பெரிய வருவாயாக இருந்தது வருவது மீன்பிடி அதன் சார்ந்த தொழில்களும், ஆண்டு ஒன்றுக்கு சுமார் 1 மெட்ரிக் டன் மீன் ஏற்றுமதி செய்து வருகிறது. கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி மீன்பிடி தடை காலம் துவங்கியது. இதனால் மீனவர்கள் படகுகள் அனைத்தையும் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டு பழுது பழுது நீக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

தங்களது படகுகளில் பழுதாகி உள்ள இன்ஜின்கள்,வர்ணம், பலகைகள் மாற்றுதல், உள்கட்டமைப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தில் மொத்தம் உள்ள 5,000 விசைப்படகுகளில் ராமேஸ்வரத்தில் மட்டும் 700 படகுகள் உள்ளன.
ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரம் ,பாம்பன் மண்டபம், பகுதியில் ச 1500 மேற்பட்ட விசைப்படகுகள் உள்ளன.
இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் படகுகளை சீரமைக்கும் பணியில் வேகம் காட்டி வருகின்றனர் படகு உரிமையாளர்கள்

இதுகுறித்து மீனவர்களிடம் கேட்டபொழுது பாதிக்கும் மேற்பட்ட படகுகள் பழுது சரி செய்து கடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது ஆகும் மீதி படகுகள் ஜூன் 15ஆம் தேதிக்குள் தயாராகிவிடும் என்றும் தெரிவித்தனர்.
மேலும் அவர்களிடம் குறைகள் கேட்கும் பொழுது மீன்பிடி தடைக்கால நிவாரண தொகை தற்போது வரை தங்களுக்குக் கிடைக்கவில்லை என்றும் அது எப்போதுமே கடலுக்கு திரும்பிச் சென்ற பிறகே வந்து சேர்வதாகவும் வேதனை தெரிவித்தனர்.

இதுகுறித்து மீன்வளத்துறை கூடுதல் இயக்குனர் டாம் வர்கீஸ் அவரிடம் கேட்டபொழுது இந்த ஆண்டு முதல் நிவாரண கால தொகை நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் அதனால் மாவட்டம் முழுவதும் 33 இ-சேவை மையங்கள் திறக்கப்பட்டு அதில் மீனவர்களின் ஆவணங்கள் பெறப்பட்டு வருவதாகவும் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த நிவாரணத் தொகை பெற்று வருவதாகவும் தேர்தல் நடத்தை விதி அமலில் இருந்த காரணத்தால் பணியை துவங்குவதில் தாமதம் ஏற்பட்டதாகவும் அவர் கூறினார்.
மீனவர்களின் ஆவணங்கள் பதிவேற்றும் பணி நடைபெற்று வருவதாகவும், முடிவடைந்தவுடன் நேரடியாக வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்றார்.
இதில் இணைப்பதற்கு மீனவர்கள் இ-சேவை மையங்களுக்கு ஆதார் அட்டை, மீன் சங்க உறுப்பினர் அட்டை, வங்கி கணக்கு, பயோமெட்ரிக் அட்டை, உள்ளிட்டவற்றுடன் சென்று தங்களை இணைத்துக் கொள்ளும் படியும் அவர் கேட்டுக்கொண்டார்.

வரும் காலங்களில் இது போன்ற நிலை இருக்காது என்றும் நேரடியாக மீனவர்கள் வங்கிக் கணக்கிலேயே நிவாரணத் தொகை வழங்கப்படும் என்பதும் தற்போது மீன்பிடி தடைக்கால நிவாரண தொகை மட்டுமே வழங்கப்படும் உள்ளதாகவும் பிற்காலங்களில் மாற்றம் ஏதும் இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.