ETV Bharat / state

23 வருடங்களுக்கு முன்பு மாயமான மீனவர்! - இலங்கையில் இருப்பதையறிந்த குடும்பத்தினர் மகிழ்ச்சி! - Ramanathapuram

ராமநாதபுரம்: 23 வருடங்களுக்கு முன் கடலில் தொலைந்த மீனவர், இலங்கையில் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருப்பதை அறிந்த அவரது குடும்பத்தினர் அவரை மீட்டுத்தரக்கோரி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் மனு அளித்தனர்.

fisherman
author img

By

Published : May 6, 2019, 4:04 PM IST

ராமநாதபுர மாவட்டம் ராமேஸ்வரம் அருகே உள்ள சல்லிமலை பகுதியில் வசித்து வருபவர் சரவணசுந்தரி. இவரது தந்தை பரதன் மீன் பிடிக்கூலியாக பணி செய்து வந்துள்ளார். 1996ஆம் ஆண்டு மே மாதம் 4ஆம் தேதி தங்கச்சிமடத்தைச் சேர்ந்த ஜான்சனுக்கு சொந்தமான படகில் பரதன் உள்பட நான்கு பேர் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்று உள்ளனர்.

அப்போது படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பரதன் கடலில் மூழ்கிவிட்டதாகக் கூறினார். அதனால் அவர் கடலில் மூழ்கி இறந்து இருப்பார் என்று 23 வருடங்களாக குடும்பத்தினர் நம்பி வந்தனர். இந்நிலையில், சரவணசுந்தரியின் உறவினர் ராஜேஷ் யூடியூப்பில் கொழும்புச் சார்ந்த வீடியோ பார்த்தபோது, அதில் இலங்கை கொழும்பில் பரதன் மனநலம் பாதிக்கப்பட்டு பிச்சை எடுத்து வருவது தெரியவந்தது.

23 வருடங்களுக்கு முன்பு தொலைந்த மீனவரை மீட்க கோரிக்கை
இதை காணொளியை சரவணசுந்தரியிடம் காட்டினார். அதை பார்த்து அவர், அது தனது தந்தைதான் என உறுதி செய்தார். அதனைத் தொடர்ந்து இலங்கையில் மனநலம் பாதிக்கப்பட்டு இருக்கும் பரதனை மீட்கக் கோரி அவரது குடும்பத்தினர் இன்று மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் மனுவை அளித்தனர்.

Intro:இராமநாதபுரம்
மே.6
23 வருடங்களுக்கு முன் கடலில் தொலைந்தவர் இலங்கை மனநலம் பாதிக்கப்பட்டு இருக்கு மீனவரை மீட்க கோரி குடும்பத்தினர் ஆட்சியரிடம் மனு.

Body:இராமநாதபுர மாவட்ட இராமேஸ்வரம் அருகே உள்ள சல்லிமலை பகுதியில் வசித்துவரும் சரவணசுந்தரி. இவரது தந்தை பரதன் மீன் பிடிக் கூலியாக பணி செய்து வந்துள்ளார்.
கடந்த 1996 ஆண்டு மே மாதம் 4 தேதி தங்கச்சிமடத்தை சேர்ந்த ஜான்சனுக்கு சொந்தமான படகில் பரதன் உட்பட 4 பேர் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்று உள்ளனர்.

படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பரதன் கடலில் மூழ்கிவிட்டதாகவு அவர் கடலில் முழ்கி இறந்து இருப்பார் என்று எண்ணிக் குடும்பத்தினர் வாழ்ந்து வந்தனர்.
இந்நிலையில் சரவணசுந்தரியின் உறவினர் ராஜேஸ் யூடியூப்யில் கொழும்பு சார்ந்த வீடியோ பார்த்த பொழுது அதில் இலங்கை கொழும்பில் பரதன் மனநலம் பாதிக்கப்பட்டு பிச்சை எடுத்து வருவது தெரியவந்தது.

இதை காணொளியை சரவணசுந்தரியிடம் அந்த வீடியோவை காட்டினார். அதை பார்த்து தனது தந்தைதான் என உறுதி செய்தார்.
அதனைத் தொடர்ந்து இலங்கையில் மனநல பாதிக்கப்பட்டு இருக்கும் பரதனை மீட்கக் கோரி அவரது குடும்பத்தினர் இன்று மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் மனுவை அளித்தனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.