ETV Bharat / state

கடலில் மீன்பிடிக்கத் தயாராகும் நாட்டுப் படகு மீனவர்கள்! - மீன்பிடிக்க ஊரடங்கிலிருந்து விலக்கு

ராமாநாதபுரம்: சுழற்சி முறையில் மீன்பிடிக்க அனுமதி வழங்க மீன்வளத்துறை திட்டமிட்டுள்ள நிலையில், நாட்டுப்படகு மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கத் தயாராகி வருகின்றனர்.

Rameshwaram fisherman
Country fisherman getting ready for fishing
author img

By

Published : Apr 12, 2020, 9:05 PM IST

கரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பைக் கட்டுப்படுத்த பிரதமர் நரேந்திர மோடி, கடந்த மார்ச் 25ஆம் தேதி நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார். இதையடுத்து தற்போது 19 நாட்கள் ஊரடங்கு உத்தரவு கடந்த நிலையில் , மீன்பிடிப்புக்கு ஊரடங்கிலிருந்து விலக்கு அளித்து மத்திய அரசு உத்தரவுப் பிறப்பித்தது.

இதைத்தொடர்ந்து நாட்டுப் படகு மீனவர்களை மட்டும் மீன்பிடிக்க சுழற்சி முறையில் அனுப்ப மீன்வளத்துறை திட்டமிட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள் மூலம் மீனவர்கள் மீன்பிடிப்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.

இதனையடுத்து விதிமுறைகளுக்கு உட்பட்டு நாட்டுப் படகுகளில் மீன்பிடிக்க அனுமதி வழங்கப்படுகிறது. அதன்அடிப்படையில் தனுஷ்கோடி முதல் ராமேஸ்வரம் நகராட்சி எல்லைக்குட்பட்ட மீனவர்கள் திங்கள், புதன்,சனி ஆகிய மூன்று நாட்களிலும், பாம்பன், தங்கச்சிமடம் ஆகிய ஊராட்சிகளுக்கு உட்பட்ட கிராம மீனவர்கள் செவ்வாய், வியாழன், ஞாயிறு ஆகிய நாட்களிலும் மீன்பிடித்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மீன்பிடிக்க அனுமதி வழங்கியிருப்பதைத் தொடர்ந்து நாட்டுப் படகு மீனவர்கள் தங்களின் படகுகளை தயார் செய்து வருகின்றனர். இதனிடையே, கரோனா வைரஸ் பரவல் இந்தியாவில் வேகமெடுத்துள்ள நிலையில், மீன்பிடிப்புக்கு அனுமதி என்பது சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க முடியாத நிலையை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளதாக சமூக ஆர்வலர்கள கருத்து தெரிவிக்கின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.