ETV Bharat / state

போலி இ - பாஸ் தயாரித்த கார் டிரைவர் கைது!

author img

By

Published : Jun 15, 2020, 2:07 PM IST

ராமநாதபுரம் : போலி இ - பாஸ் மூலம் நான்கு பேரை சென்னையிலிருந்து ராமநாதபுரம் அழைத்து வந்த வாடகை கார் ஓட்டுநரை காவல் துறையினர் கைது செய்தனர்.

போலி இ பாஸ் போலி இ பாஸ் தயாரித்த கார் ஓட்டுநர் ராமநாதபுரம் ramanadhapuram fake e pass fake e pass car driver arrested
போலி இ பாஸ் தயாரித்த கார் ஓட்டுநர் கைது

சென்னை, அம்பத்தூரை சேர்ந்த கார் ஓட்டுநர் கணேஷிடம் அதே பகுதியைச் சேர்ந்த சேது குமார் என்பவர் ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் சென்று வர வாடகைக் கார் வேண்டி கேட்டுள்ளார். இந்நிலையில், காருக்கான இ - பாஸை தானே எடுத்து விடுவதாகவும், அதன் மூலம் சென்று வரலாம் எனவும் ஓட்டுநர் கணேஷ் அவரிடம் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, தனது மனைவி உட்பட நான்கு பேரை அழைத்துக் கொண்டு தன் உறவினரைப் பார்க்க, சேது குமார் ராமநாதபுரம் மாவட்டம், பாம்பனுக்கு வந்துள்ளார். இந்நிலையில், பரமக்குடி அருகே உள்ள பார்த்திபனூர் சோதனைச் சாவடியில் காவல் துறையினர் சோதனை மேற்கொண்டபோது போலி இ - பாஸ் மூலம் அவர்கள் பயணித்தது தெரிய வந்தது.

அதனைத் தொடர்ந்து, வியாபார நோக்கில் அரசு ஆவணங்களைத் தவறாக பயன்படுத்தி போலி இ - பாஸ் தயாரித்த கார் ஓட்டுநர் கணேஷ் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, கைது செய்தனர். மேலும், காரில் பயணம் செய்த சேது குமார் உள்ளிட்ட நான்கு பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு கரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ள உள்ளதாகவும் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: பத்திரிகையாளர் போர்வையில் பைக் திருட்டு: பலே ஆசாமி கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.