ராமநாதபுரம்: கீழக்கரை அருகே உள்ள தில்லையேந்தலைச் சேர்ந்தவர் கார் மேகம். இவரது மகன் வாசுதேவன் (7). இரண்டாம் வகுப்பு படிக்கும் சிறுவனான இவர், ராமநாதபுரத்தில் உள்ள உறவினர் வீட்டில் சில நாள்கள் இருந்து விட்டு ஊர் திரும்பியுள்ளார்.
தொடர்ந்து ஊருக்கு வரும்போது, ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள பேக்கரியில் சமோசா வாங்கி வீட்டுக்கு கொண்டு வந்துள்ளார். அந்த சமோசாவுக்குள் பல்லி இருந்ததை அறியாமல் சிறுவன் உண்ட நிலையில், சிறிது நேரத்தில் அவருக்கு வாந்தியும் மயக்கமும் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து கீழக்கரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிறுவன் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
பேக்கரி, உணவகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் அலட்சியமாக உணவுப் பொருள்களை தயாரிப்பதால் இதுபோன்ற பிரச்சனைளை நுகர்வோர் சந்தித்து வருகின்றனர்.
எனவே, சுகாதாரத்துறையினரும், உணவு பாதுகாப்புத் துறையினரும் பேக்கரி, உணவகங்களில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: Exclusive: ஏரிகளைச் சீரமைக்கும் பணிகளின் நிலை என்ன?