ETV Bharat / state

ராமநாதபுரத்தில் கரை ஒதுங்கிய பிரம்மோஸ் ஏவுகணையின் உதிரிபாகம்! - sea

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கிய பொருள், பிரம்மோஸ் ஏவுகணையின் எரிபொருள் உதிரிபாகம் என கண்டறியப்பட்டுள்ளது.

பிரம்மோஸ் ஏவுகணை உதிரிபாகம்
author img

By

Published : Mar 28, 2019, 12:47 PM IST

ராமநாதபுரம் மாவட்டம், பனைக்குளம் புதுக்குடியிருப்பு கடற்கரை பகுதியில் நேற்றைய தினம் மர்மப் பொருள் ஒன்று கரை ஒதுங்கியிருப்பதாக மீனவர்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். இதன்பேரில் அங்கு வந்து போலீசார் ஆய்வு செய்தபோது, அது பிரம்மோஸ் ஏவுகணையின் எரிபொருள் உதிரிபாகம் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்துதேவிபட்டினம் கடலோர காவல்படைக்குதகவல் அளிக்கப்பட்டது. அவர்கள் அங்கு விரைந்துசென்று ஆய்வு செய்தபோது, அது 800 கிலோ எடை கொண்டதாகவும் 12 மீட்டர் நீளம் கொண்டதாகவும் இருந்தது தெரியவந்தது.

பிரம்மோஸ் ஏவுகணை உதிரிபாகம்

இதுகுறித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா கூறுகையில், "பிரம்மோஸ் ஏவுகணையின் எரிபொருள் குறித்த தகவல் இஸ்ரோ அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளோம். அவர்கள் ஓரிரு நாளில் பனைக்குளம் கடற்கரைக்கு வந்து அந்தப் பொருளை ஆய்வு செய்து பின் அதை எடுத்துச் செல்வதா அல்லது அங்கேயே புதைத்து விடுவதா என்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தனர். அது வெடிக்கும் தன்மை கொண்ட பொருள் இல்லை என்பது வெடிகுண்டு பரிசோதனைக் குழு மூலம் ஆய்வு செய்து உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தற்போதைக்கு அந்தப் பாகம் கடலின் கரையில் வைக்கப்படுள்ளது", என்றார்.

Intro:இராமநாதபுரம்
மார்ச். 28
ராமநாதபுரம் அருகே கரை ஒதுங்கிய பிரம்மோஸ் ஏவுகணையை எரிபொருள் பாகம்.

Body:ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் புதுக்குடியிருப்பு கடற்கரை பகுதியில் நேற்றைய தினம் மர்மப் பொருள் ஒன்று கரை ஒதுங்கி இருப்பதாக மீனவர்கள் காவல் துறைக்கு தகவல் அளித்தனர். தகவல் எடுத்து அந்த பொருளை ஆய்வு செய்தபோது அது பிரம்மோஸ் ஏவுகணையை எரிபொருள் உதிரிப்பாகம் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் தேவிபட்டினம் கடலோர காவல் படைக்கு அளிக்கப்பட்டது அவர்கள் அங்கு விரைந்து அதனை ஆய்வு செய்த பொழுது அது 800 கிலோ எடை கொண்டதாகவும் 12 மீட்டர் நீளம் கொண்டதாகவும் இருந்தது தெரியவந்தது இதுகுறித்து.

மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனாவிடம் விசாரித்த பொழுது அவர் கூறியது அந்த பிரம்மோஸ் ஏவுகணையின் எரிபொருள் குறித்த தகவல் இஸ்ரோ அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.

அவர்கள் ஓரிரு தினத்தில் பனைக்குளம் கடற்கரைக்கு வந்து அந்தப் பொருளை ஆய்வு செய்து பின் அதை எடுத்துச் செல்வதா அல்லது அங்கேயே புதைத்து விடுவது என்பது குறித்து முடிவு எடுக்க உள்ளதாகவும் தெரிவித்தனர்.

அது வெடிக்கும் தன்மை கொண்ட பொருள் இல்லை என்பது வெடிகுண்டு பரிசோதனை குழு மூலம் ஆய்வு செய்து உறுதிப்படுத்தப்பட்டது.

தற்போதைக்கு அந்தப் பாகம் கடலில் கரையில் வைக்கப்படுள்ளது என்று கூறினார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.