ராமநாதபுரம் மாவட்டம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 380க்கும் மேற்பட்டோர் கரோனா தொற்று நோய் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று (மே18) ஒரே நாளில் 22 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியானது. இதனையடுத்து ராமநாதபுரம் கூடுதல் ஆட்சியர் பிரதீப்குமார் மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார்.
கரோனா தொற்றிற்கு சிகிச்சை பெற்று வருபவர்கள், அவர்களுக்கு அளிக்கப்படும் மருத்துவ சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். படுக்கைகள், ஆக்ஸிஐன் சிலிண்டர் குறித்தும் பிரதீப்குமார் ஆய்வு செய்தார்.
இதைத்தொடர்ந்து பேசிய அவர், "மருத்துவமனையில் கடந்த 24 மணிநேரத்தில் 19 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அதில் 6 பேர் மட்டுமே கரோனா நோய் தொற்றுக்கு உள்ளானவர்கள், மற்றவர்கள் பல்வேறு நோய் காரணமாக உயிரிழந்துள்ளனர்" எனத் தெரிவித்தார்.
"தொடர்ந்து கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் இறுதி கட்ட நேரத்தில் மருத்துவமனைக்கு வருவதால் உயிரிழப்பை தவிர்க்க முடியாத நிலை உள்ளது. பொதுமக்கள் கரோனா அறிகுறி தென்பட்டவுடன் மருத்துவமனைக்கு வர வேண்டும், அப்போது தான் உயிரிழப்பை தவிர்க்க முடியும்" என கூடுதல் ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'ஒரு தாயின் உணர்வுகளையும் கோரிக்கையையும் விரைந்து பரிசீலனை செய்ததற்கு நன்றி’ - அற்புதம்மாள்