ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணியாற்றியவர் ஹபீப் முகம்மது (38).
இவர், பள்ளி மாணவிகளுக்கு செல்போன் மூலம் பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்ட விவகாரத்தில் கடந்த ஜூன் மாதம் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இது தொடர்பாக காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்த நிலையில் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் கார்த்திக் பரிந்துரையின்படி மாவட்ட ஆட்சியர் சந்திரகலா, ஆசிரியர் ஹபீப் முகம்மதுவை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார்.
இதனையடுத்து அவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதையும் படிங்க: 86 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை