ETV Bharat / state

மருந்தகம் தவிர மற்ற கடைகள் திறந்தால் கடும் நடவடிக்கை - ramanathapuram latest news

ராமநாதபுரம்: மருந்தகம், உணவு, பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் வியாபாரம் செய்யும் கடைகள் தவிர மற்ற கடைகள் திறந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கொ.வீர ராகவ ராவ் எச்சரித்துள்ளார்.

ramanathapuram-collector
ramanathapuram-collector
author img

By

Published : Mar 23, 2020, 4:07 PM IST

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்களுக்கு மிக அத்தியாவசிய தேவையான பால், காய்கறிகள், உணவுப்பொருள்கள், மருந்துகள், பெட்ரோல், டீசல், கேஸ் உள்ளிட்ட கடைகள், நிறுவனங்களைத் தவிர மற்ற அனைத்து கடைகளும் மார்ச் 31ஆம் தேதி வரை கட்டாயம் அடைத்திட வேண்டும். அதனைக் கண்காணிக்க காவல் துறை, வருவாய்த் துறை, உள்ளாட்சித் துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பினை மீறும் கடைகள், நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளார். மேலும் அவர், பொதுமக்கள், தனிநபர் சுகாதாரத்தைக் காக்கும் வகையில் தொடர்ந்து சோப்பு, சானிடைசர் பயன்படுத்தி கைகளைக் கழுவி சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். பெற்றோர்கள் குழந்தைகளை விடுமுறை நாள்களில் குழுவாகக் கூடி விளையாடுவதைத் தவிர்ப்பது, வெளியில் கூட்டிச்செல்வது உள்ளிட்டவைகளைத் தவிர்க்க வேண்டும்.

சாதாரண மருத்துவ சிகிச்சைக்கு மருத்துவமனைக்கு செல்வதைத் தவிர்க்க வேண்டும். மருந்தகங்கள், உணவகங்களுக்கு செல்லும் பொதுமக்கள் போதிய இடைவெளி விட்டு செல்ல வேண்டும். கரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் அனைத்திற்கும் பொதுமக்கள் தங்களது முழு ஒத்துழைப்பை அளிக்க வேண்டும்” என அறிவித்துள்ளார்.

இதையும் படிங்க: அனைத்து மாவட்ட எல்லைகளையும் மூட முதலமைச்சர் உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.