ETV Bharat / state

சொந்த மண்ணில் அப்துல் கலாம் நினைவு தினம் அனுசரிப்பு! - President Abdul Kalam

ராமநாதபுரம்: முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் 4ஆம் ஆண்டு நினைவு தினத்தையெட்டி, அவரின் குடும்பத்தினர் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

ராமநாதபுரம்
author img

By

Published : Jul 27, 2019, 4:04 PM IST

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் 4ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கபட்டுவருகிறது. அதன் ஒரு பகுதியாக, அவரது அண்ணன் முத்துமீரான் தலைமையில், ராமநாதபுர மாவட்டம் பேக்கரும்பில் அமைந்துள்ள அப்துல் கலாமின் நினைவு மண்டபத்தில் சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டது.

இதில் அவரது குடும்பத்தினர், பள்ளி, கல்லூரி மாணவர்கள் என பலர் கலந்துகொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

சொந்த மண்ணில் அனுசரிக்கப்படும் முன்னாள் குடியரசு தலைவரின் நினைவு தினம்!

பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அப்துல்கலாமின் பேரன் சலீம், "மாணவர்கள் அதிகம் நேசித்த அப்துல்கலாம் மறைந்து நான்கு ஆண்டுகள் கடந்த நிலையில் அவரின் கருத்துகள் மாணவர்களை ஊக்கப்படுத்திவருகிறது. அவரின் கனவை நினைவாக மாற்ற மாணவர்கள் உறுதி எடுக்கவேண்டும். அவரின் மற்றொரு கனவான, 122 கோடி பேருக்கு 122 கோடி மரங்கள் வளர்ப்பு திட்டத்தை அப்துல் கலாம் பவுண்டேசன் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது” என்றார்.

இதனைத் தொடர்ந்து அப்துல் கலாமின் நினைவிடத்திற்கு சென்ற சட்டப்பேரவை உறுப்பினர் கருணாஸ், "கலாமின் நினைவு நாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும். நாட்டிற்காக எந்த ஒரு களங்கமும் இல்லாமல் உழைத்த மாமனிதர் அப்துல் கலாம். அவர் சாதி மதங்களை கடந்த ஒப்பற்ற தலைவர். அந்த மாமனிதரின் நினைவு தினத்தை அரசு விழாவாக அறிவித்து முதலமைச்சர் வருகை தந்து மரியாதை செலுத்த வேண்டும். அவர் இறந்து மூன்று ஆண்டுகள் ஆன பிறகும் அவரின் நினைவு தினத்தை அரசு விழாவாக அறிவிக்காமல் இருப்பது வருத்தத்தை அளிக்கிறது" என்றார்.

Intro:இராமநாதபுரம்
ஜூலை.27

அப்துல்கலாமின் 4 ஆம் ஆண்டு நினைவு தினத்தையெட்டி குடும்பத்தினர் சிறப்பு பிரார்த்தனை.

Body: மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் ஏபிஜே அப்துல்கலாமின் 4 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கபட்டு வருகிறது. இராமநாதபுர மாவட்டம் பேக்கரும்பில் அமைந்து ஏபிஜே அப்துல்கலாமின் நினைவு மண்டபம் அவரது அண்ணன் முத்துமீரான் மரைக்கார் தலைமையில் குடும்பத்தினர் சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர். மாணவர்கள் அதிக நேசித்தவர் அப்துல் கலாம் அதன் வெளிப்பாடாக அதிக அளவில் பள்ளி கல்லூரி மாணவர்கள் நேரில் வந்து பார்த்து தங்கள் மரியாதையை செலுத்திச் செல்கின்றனர். மேலும் அவரின் வளர்ந்த இந்தியா கனவை நினைவாக மாற்றுவோம் என உறுதிமொழி எடுத்துச் சென்றனர்.

பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அப்துல்கலாமின் பேரன் சலீம் கூறியது மாணவர்கள் அதிகம் நேசித்த அப்துல்கலாம் மறைந்து நான்கு ஆண்டுகள் கடந்த நிலையில் அவரின் கருத்துக்கள் மாணவர்களை ஊக்கப்படுத்தி வருகிறது. மாணவர் அவரின் கனவை நினைவாக மாற்ற உறுதி எடுக்கவேண்டும். அவரின் மற்றொரு கனவான 122 கோடி பேருக்கு 122 கோடி மரங்கள் வளர்ப்பு திட்டத்தை அப்துல் கலாம் பவுண்டேசன் மூலம் தற்போது தமிழ்நாடு முழுவதும் 1 கோடி மரங்கள் நட்டு வருவதாக அவர் கூறினார்.

பேட்டி. சலீம்
அப்துல்கலாமின் பேரன்

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.