புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜீவ் காந்தி (28), தன்னிடம் தையல் கற்க வந்த 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். தொடர்ந்து மூன்று முறை அச்சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ராஜீவ் காந்தி மீது, சிறுமியின் பெற்றோர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த ராஜீவ் காந்தியை காவல் துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். இந்த வழக்கு புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரணை செய்த நீதிபதி சத்யா, ராஜீவ் காந்திக்கு ஆயுள் தண்டனையும், மூன்று முறை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக மேலும், 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்தார். அத்தோடு ஒரு லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
இதையும் படிங்க:மராத்தா சமுதாயத்துக்கு இட ஒதுக்கீடு ரத்து: திமுக அரசு மேல்முறையீடு செய்ய வைகோ வலியுறுத்தல்