புதுக்கோட்டை மாவட்டம் திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் மாசிமக பெருவிழா கடந்த 28 ஆம் தேதியன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்தத் திருவிழாவானது தொடர்ந்து முத்துமாரி அம்மனுக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்து அம்மன் வீதி உலா சென்ற எட்டு நாள்களாக நடந்து வந்தது.
நேற்று (மார்ச் 8) ஒன்பதாம் நாள் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா வெகுச் சிறப்பாக நடைபெற்றது. அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அலங்கரிக்கப்பட்ட தேரில் வைத்து பூஜைகள் செய்யப்பட்டன. பக்தர்கள் அரோகரா என்று முழக்கமிட்டவாறு தேரினை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.
தேரில் அம்மன் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்தத் தேர் திருவிழாவில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனின் அருள் பெற்றுச் சென்றனர்.
புதுக்கோட்டையில் வரலாற்று சிறப்புமிக்க இக்கோயில் திருவிழாவிற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் வருகை தந்திருந்தனர்.
இதையும் படிங்க: உலகப் பெண்கள் தினம்! - பத்மஸ்ரீ சின்னப்பிள்ளை வேண்டுகோள்!