ETV Bharat / state

புதுக்கோட்டை அருகே தீவிபத்து: 3 வீடுகள் எரிந்து சேதம்! - புதுக்கோட்டை மாவட்ட செய்திகல்

புதுக்கோட்டை: சமத்துவபுரம் அருகே மூன்று கூரை வீடுகளில் ஏற்பட்ட தீவிபத்தில் சுமார் ஐந்து லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமாகின.

Three houses damaged in fire near PudukkottaiThree houses damaged in fire near Pudukkottai
Three houses damaged in fire near Pudukkottai
author img

By

Published : Sep 24, 2020, 9:57 PM IST

புதுக்கோட்டை மாவட்டம் சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வெண்ணிலா. இவரது வீட்டில் நேற்று (செப்.23) எதிர்பாரதவிதமாக தீவிபத்து ஏற்பட்டுள்ளது. மேலும் அச்சமயம் பலத்த காற்று வீசிய காரணத்தால், அடுத்தடுத்த மூன்று வீடுகளுக்கும் தீ பரவத்தொடங்கியுள்ளது.

இதைக்கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால் தீயணைப்புத் துறையினர் வருவதற்குள்ளாகவே மூன்று வீடுகள் முற்றிலும் எரிந்து நாசமானது. இந்த விபத்தில் வீட்டிலிருந்த தங்கம், வெள்ளி, வீட்டு உபயோகப் பொருட்கள் என ஐந்து லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். மேலும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என வீட்டின் உரிமையாளர்கள் கண்ணீர் மல்க கோரிக்கைவிடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: மன உளைச்சல் காரணமாக அரசு பேருந்து ஓட்டுநர் தற்கொலை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.