புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி திமுக ஒன்றியச் செயலாளராகச் செயல்பட்டு வருபவர், அடைக்கல மணி. இவர் ஜூன் 15ஆம் தேதி இரவு மதுபோதையில் காரில் வந்த போது, வளையப்பட்டி ஐந்தாம் எண் சாலையில், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து பெண் காவலர் பிரான்சிஸ் மேரியை தகாத வார்த்தையில் பேசியதோடு, மோதலில் ஈடுபட்டுள்ளார்.
இதனையடுத்து மதுபோதையில் கார் ஓட்டியதாக திமுக ஒன்றியச் செயலாளர் அடைக்கல மணி மீது பொன்னமராவதி போக்குவரத்து காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும் அவரது மனைவி சுதா, பொன்னமராவதி ஒன்றிய சேர்மன் ஆக இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து அவர் மீது அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தது, பொது இடத்தில் மது போதையில் அநாகரிகமாக நடந்து கொண்டது, உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் பொன்னமராவதி போக்குவரத்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.