ETV Bharat / state

தமிழகத்திலேயே கூடை பின்னும் பணியை தொழிலாகக் கொண்ட கிராம மக்கள்

புதுக்கோட்டை: தமிழகத்திலேயே கூடை பின்னும் பணியை தொழிலாகக் கொண்ட கிராம மக்கள் குறித்து செய்தி தொகுப்பினை பார்க்கலாம்.

கூடை பின்னும் பணியை தொழிலாகக் கொண்ட கிராம மக்கள்

author img

By

Published : Dec 12, 2019, 10:49 AM IST

புதுக்கோட்டையிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது மாங்கனாம்பட்டி எனும் கிராமம். இந்த கிராமத்தில் சுமார் 300 குடும்பத்தினர் வசிக்கின்றனர்.

பொதுவாக கிராமங்களில் விவசாயம் செய்வது கூலிவேலை செய்து வருமானம் ஈட்டுவது போன்றவையைத் தான் நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் விவசாயத்திற்கு சமமாக இந்த கிராமத்தில் குச்சியால் ஆன கூடை செய்யும் பணியை மட்டுமே பரம்பரை பரம்பரையாக தொழிலாகக் கொண்டுள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்களிடம் கேட்டபோது, "தலைமுறை தலைமுறையாக இந்த தொழிலை மட்டும் தான் செய்து வருகிறோம். மரக்குச்சி, தைல மரக் குச்சி போன்றவற்றைக் கொண்டு கூடை செடி வளர்ப்பு காடை கூண்டு போன்றவற்றை தயார் செய்கிறோம்.

இதனை நாங்கள் நேரடியாக விற்பதில்லை ஏனென்றால் மக்கள் யாரும் எங்களிடம் நேரடியாக வந்து வாங்குவதில்லை. மொத்தமாக கொடுத்து விடுவோம் அவர்கள் குறித்த தொகையைக் கொடுத்து விட்டு மற்ற மாவட்டங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்வார்கள்.

ஒரு நாளுக்கு 5 கூடை வரை பின்ன முடியும். இதற்கென இயந்திரங்கள் எல்லாம் கிடையாது.

இந்த தொழிலை மேம்படுத்தவும், நேரடி சந்தைப்படுத்தவும் அரசாங்கம் எங்களுக்கு ஏதேனும் கடன், மானியம் போன்றவற்றை வழங்கினால் நன்றாக இருக்கும்.

முன்பெல்லாம் அதிகளவில் இந்த தொழிலை செய்துவந்த நிலையில் தற்பொழுது குறைந்த வருமானம் கிடைக்கிறது என கூடை பின்னுவதை குறைத்து வருகின்றனர். இருப்பினும் இது ஒன்று தான் எங்களுக்கு தெரிந்த தொழில் என்று வாழ்ந்து வருகிறோம்.

கூடை பின்னும் பணியை தொழிலாகக் கொண்ட கிராம மக்கள்

தேசிய நெடுஞ்சாலைகளின் ஓரமாக அரசாங்கமும், சில அமைப்பினரும் மரங்கள் நட்டு வைக்கின்றனர். அவர்கள் எல்லாம் எங்களிடம் இந்த மரக்கன்று கூண்டை மொத்தமாக வாங்கினால் எங்களுக்கு உதவியாக இருக்கும்.

நாங்கள் கைகளால் செய்யும் இந்த கூண்டு மற்றும் கூடைகள் ஐந்து ஆண்டுகள் வரை உறுதியாக இருக்கும்" என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: சத்தீஸ்கரில் மொட்டை மாடி விவசாயி!

Intro:Body:தமிழகத்திலேயே கூடை பின்னும் பணியை தொழிலாகக் கொண்ட கிராம மக்கள்.

புதுக்கோட்டை மாவட்டத்தின் மத்தியிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது மாங்கனாம்பட்டி எனும் கிராமம். இந்த கிராமத்தில் சுமார் 300 குடும்பங்கள் வசிக்கின்றனர். பொதுவாக கிராமங்களில் விவசாயம் செய்வது கூலி வேலை செய்து வருமானம் ஈட்டுவது போன்றவையைத் தான் நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் விவசாயத்திற்கு சமமாக இந்த கிராமத்தில் குச்சியால் ஆன கூடை செய்யும் பணியை மட்டுமே பரம்பரை பரம்பரையாக தொழிலாகக் கொண்டுள்ளனர். இந்த கூடை பின்னும் தொழில் மட்டுமே அவர்களுக்கு வருமானம் ஈட்டும் பிழைப்பாகிறது.

இதுகுறித்து அப்பகுதி மக்களிடம் கேட்டபோது,

தலைமுறை தலைமுறையாக இந்த தொழிலை மட்டும் தான் செய்து வருகிறோம். மரக்குச்சி,தைல மரக் குச்சி, போன்றவற்றைக் கொண்டு கூடை செடி வளர்ப்பு காடை கூண்டு போன்றவற்றை தயார் செய்கிறோம். இதனை நாங்கள் நேரடியாக விற்பதில்லை ஏனென்றால் மக்கள் யாரும் எங்களிடம் நேரடியாக வந்து வாங்குவதில்லை. மொத்தமாக கொடுத்து விடுவோம் அவர்கள் குறித்த தொகையைக் கொடுத்து விட்டு மற்ற மாவட்டங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்வார்கள். ஒரு நாளுக்கு 5 கூடை வரை பின்ன முடியும். இதற்கென இயந்திரங்கள் எல்லாம் கிடையாது. இந்த தொழிலை மேம்படுத்தவும், நேரடி சந்தைப்படுத்தவும் அரசாங்கம் எங்களுக்கு ஏதேனும் லோன், மானியம் போன்றவற்றை வழங்கினால் நன்றாக இருக்கும். முன்பெல்லாம் நிறைய பேர் இந்த தொழிலை செய்தால் தற்பொழுது குறைந்த வருமானம் கிடைக்கிறது என கூடை பின்னுவதை குறைத்து வருகின்றனர். இருப்பினும் இது ஒன்று தான் எங்களுக்கு தெரிந்த தொழில் என்று வாழ்ந்து வருகிறோம். தேசிய நெடுஞ்சாலைகளின் ஓரமாக அரசாங்கமும், சில அமைப்பினரும் மரங்கள் நட்டு வைக்கின்றனர். அவர்கள் எல்லாம் எங்களிடம் இந்த மரக்கன்று கூண்டை மொத்தமாக வாங்கி நாளும் எங்களுக்கு உதவியாக இருக்கும். நாங்கள் கைகளால் செய்யும் இந்த கூண்டு மற்றும் கூடைகள் ஐந்து ஆண்டுகள் வரை உறுதியாக இருக்கும். என்று தெரிவித்தனர்.Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.