புதுக்கோட்டை: கரோனா விழிப்புணர்வு சுவர் விளம்பரம் எழுதுவதில் விடப்பட்ட டெண்டரை ரத்து செய்து, அதனை ஓவியர்களுக்கு வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு ஓவியர் சங்கத்தினர் காத்திருப்புப் போராட்டம் நடத்தினர்.
மத்திய அரசு அனைத்துக் கிராமங்களிலும் கரோனா விழிப்புணர்வு சுவர் விளம்பரம் எழுத உத்தரவிட்டு, அதற்கான நிதியை ஒதுக்கியுள்ளது. அதன்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்துக் கிராமங்களிலும் ஒதுக்கீடு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இப்பணிகளை ஓவியர்களுக்கு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு ஓவியர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை வைத்தனர்.
தமிழ்நாடு ஓவியர்கள் சங்கத்தினர் தர்ணா:
ஏற்கனவே, கரோனா காலத்தால் ஓவியர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ள சூழலில் சுவர் விளம்பரம் எழுதுவதால் அவர்களுக்கு வருமானம் கிடைக்கும் என்ற கருத்தையும் முன் வைத்தனர். ஆனால், தற்போது இப்பணிகளை தொடர்வதற்கு தனியாருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது.
இதனையறிந்த ஓவியர்கள் 50க்கும் மேற்பட்ட புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டனர். தனியாருக்கு விடப்பட்ட டெண்டரில் முறைகேடு நடந்துள்ளதாகவும், இதனால், வாழ்வாதாரத்தை இழந்து வருவதாகவும் வேதனைத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: தனியார் மூலம் ஊழியர்களை நியமிக்கும் உத்தரவு ரத்து - அறிவிப்பு வெளியிட்டது தமிழ்நாடு மின்வாரியம்